ரோஜாவிற்கு திருமணமாம்

இளஞ்செடி ஒன்று வளர்கிறது
கிளைகளெடுத்து பெரிதாய் ஆகின்றது
மெல்ல மெல்ல வளர்ந்து மொட்டு விடுகிறது
பழுத்த இலைகளிடையே அழகிய மலர்
சிரித்துக் கொண்டே பூக்கின்றது
திடீரென்று அதை பறித்து விடுகின்றனர்
வளரத்தவரே அதை வேறு பக்கம் சேர்த்துவிட்டனர்
ஏனென்றால் அந்த ரோஜாவிற்கு திருமணமாம்!