என்னவளின் வாழ்க்கை

மெட்டி ஒலியில்
மெல்லிசைக் கேட்டவளே.
கார்மேகக் கூந்தலில் மணக்
கமழும் பூச் சூடியவளே.
நெற்றி வானத்தில்
நிலவு போட்டு வைத்தவளே.
கால் கொலுசில்
நூலிடை அசைந்து
நடந்தவளே.
விதவிதமான
வண்ணச் சேலையில்
வானவில்லாய் ஜொலித்தவளே.
வீதில் அல்லவா உன் மண
வாழ்க்கை அமைந்துவிட்டது.
பானை உடைந்தார் போல் உன்
பருவமும் பாழாகிப் போனதே.
வண்ண ரோசாவாய்
வாலிப உள்ளங்களை
வலிய ஈர்த்தவளே.-இன்று
வெள்ளை ரோசாவாய்
வலம் கொண்டு வருகின்றாயே.-என்
விழியெல்லாம் நோகுதடி.
வற்றாக் கண்ணீர் கடலை கொட்டுதடி.
விலாசம் மாறி விட்டதால் - நீ
வாழ்விழந்து தவிக்கின்றாயடி.
வந்துவிடு என்னோடு என்றேனே அன்று.
நொந்து விட்டாயே என்கண் முன் இன்று.

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (30-Sep-15, 5:14 am)
Tanglish : ennavalin vaazhkkai
பார்வை : 77

மேலே