அவள் விழியெனும் நகைக் கடை
உன் 
விழியெனும் நகைக் கடையில் 
என் 
இதயத்தை அடமானம் வைத்திருந்தேன்.
அதற்கான வட்டியோ 
அசலையோ நீ 
வாங்கிக் கொள்ளவில்லை 
உன்னை நீ 
உனக்கு உற்றவனோடு 
விற்றுவிட்டாயா? - என் 
இதயத்தை என்ன செய்தாய்?
அடமானம் வைத்ததை 
அடமானம் வைத்தவனிடம் 
தந்துவிடு - இல்லையேல் 
உன்னையேத் தந்துவிடு.
உன்னால் நானும்-  உன் 
உள்ளத்து நகைக் கடைக்கு 
உரிமையாளர் ஆவேன்.

