வேறுபாடு

இவ்வுலகம்
வெறுத்தாலும் - அதில்
வாழுகின்ற நீ
வெறுத்தாலும்
நானும்
வாழ்வேன் - ஒரு
சிறு வேறுபாடு
இவ்வுலகம் வெறுத்தால்
உணர்வோடு வாழ்வேன்
நீ வெறுத்தால்
உயிரோடு மட்டுமே
வாழ்வேன் !.........
- தஞ்சை குணா