இரண்டு செய்திகள்

ஒரு செல்வந்தர் ஒரு ஓவியரின் படங்களால் கவரப்பட்டு அவற்றை விற்றுக் கொடுப்பதற்கு வசதியாக ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்தார் இரண்டு நாள் கழித்து அந்த ஓவியர் அவரிடம் வந்து தன ஓவியங்கள் ஏதேனும் விற்றனவா எனக் கேட்டார்.அதற்கு அந்த செல்வந்தர்,''உங்களுக்கு இரண்டு செய்திகள் வைத்துள்ளேன்.ஒன்று நல்ல செய்தி இன்னொன்று கெட்டசெய்தி.''என்றார்.ஓவியர் முதலில் நல்ல செய்தியைக் கூறச் சொன்னார்.செல்வந்தரும்,,''நேற்று ஒருவர் வந்து உங்கள் ஓவியங்கள் நீங்கள் இறந்தபின் புகழ் பெறுமா எனக் கேட்டார்.ஏன் அவ்வாறு கேட்கிறீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு அவர் அப்படியானால் பின்னால் நல்ல விலைக்குப் போகும் அல்லவா என்றார்..நானும் அவ்வாறு கண்டிப்பாக நடக்கும் என்று சொன்னேன்.உடனே அவர் உங்களுடைய ஓவியங்கள் அனைத்தையும் நல்ல விலைக்கு வாங்கிச் சென்று விட்டார்.இதுதான் நல்ல செய்தி''என்றார்..ஓவியர் அடுத்த் கெட்ட செய்தியைக் கேட்க ,செல்வந்தர் சொன்னார்,''உங்கள் படங்களை வாங்கியது வேறு யாருமில்லை,உங்கள் குடும்ப டாக்டர் தான்.''

எழுதியவர் : படித்து பிடித்தது (30-Sep-15, 10:26 am)
சேர்த்தது : அகர தமிழன்
Tanglish : irandu seithigal
பார்வை : 104

மேலே