ஏலேலோ ஐலசா

.......................................................................................................................................................................................

ஏலேலோ ஐலசா..ஏலேலோ
ஏல ஏலோ ஐலசா ஏல ஏலோ ஐலசா
ஏல ஏலோ ஐலசா ஏலேலோ..

சிங்களத்தான் வேசம் போட்டு
வங்கக் கடல் போனோமய்யா;
தங்கத்தமிழ் தவறிப் போயி நாக்கிலாடிச்சு..

தங்கைப்பய மாட்டிகிட்டான், திருக்கை பொழைச்சது..! – (ஏலே..)
.......................

மோடிபேசி முடிச்சாச்சுன்னு
கூடிக்குலவி போனோமய்யா..
பாடைகட்டி அனுப்பாத பணியொன்னு தாங்க..

தாடிப்பய மாட்டிகிட்டான், சீலா பொழைச்சது..! – (ஏலே..)
......................

நம்மநாட்டு கடற்படைய
நம்பிநாங்க போனோமய்யா...
கும்மகும்ம கண்ணெதிரே குத்துவிழ லாச்சு..

அம்மான்மவன் மாட்டிகிட்டான், ஆரை பொழைச்சது..!! - (ஏலே..)
.......................

அந்தோணியார் கோயிலுக்கு
சொந்தத்தோட போனோமய்யா
வந்தவழி அன்பளிப்பும் பறிமுதலாச்சு

சொந்தமவன் மாட்டிகிட்டான், சுறா பொழைச்சது..!! - (ஏலே..)
........................

கொசுவலையில் மீன்பிடிச்ச
பிரகஸ்பதி கூட்டத்துக்கு
குருவாக இருந்த தெல்லாம் பழங்கதையாச்சு..

மருமானும் மாட்டிகிட்டான், எறால் பொழைச்சது..!- (ஏலே..)
......................

முள்ளுக்காயை துரத்தும்போது
எல்லைமறந்து போனோமய்யா
பொல்லாதது செஞ்சதுபோல புல்லட் பறக்குது...

பல்லுமாமா மாட்டிகிட்டார், பாறை பொழைச்சது..! - (ஏலே..)
........................

பருக்கைசோத்து கஞ்சிக்காக
படகிலேறிப் போனோமய்யா..
விரிச்ச வலையில் சீனாவரை அரசியல் ஏங்க?...

அருமைத்தோழன் மாட்டிகிட்டான், கெளுத்தி பொழச்சது..!- (ஏலே..)
.......................

மடிவலையோ, பிடிவலையோ
மனசுப்போல போனோமய்யா..
தமிழன்கூட இந்தியனில் சேர்த்தி தானுங்க..

தாத்தனாரு மாட்டிகிட்டார், சங்கரா பொழச்சுது..! - (ஏலே..)

.......................

கடத்தல் கஞ்சா கருமமெல்லாம்
கண்டம்தாண்டி போகையிலே
கடலாடி சொடக்குப் போட்டு இலங்கை வீழுமா?

நட்டநடுவாலி மாட்டிகிட்டான், நண்டு பொழச்சுது..! -(ஏலே..)

.......................

மீனுவிதை வாங்கியாந்து
மீனுச்செடி பயிறுபண்ணி
ஆளுக்கொண்ணு கொடுக்கச் சொல்லு அரசாங் கத்தை..

அட, வயித்துப்பாடு தாங்கலியே, நாம பொழைக்கலாம்..! - (ஏலே..)
....................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (30-Sep-15, 12:38 pm)
பார்வை : 96

மேலே