திருமணமான ஆணும் பெண்தோழியின் நட்பும்
திருமணமான ஆணும் பெண்தோழியின் நட்பும்
தலைப்பு சரியா தப்பா
தெரியாதப்பா ! தெரிந்ததை
தப்பில்லாமல் சொல்வேன் அப்பா !
தப்பாமல் கேளப்பா. இப்பா!
தோழி என்றே இங்குச் சுட்டியது
சின்ன வீடும் அல்ல
சொந்த வீடும் அல்ல
சுதந்திர வீடு எனக் கொள்வோமே!.
ஓங்கும் புகழ் பெற வேண்டும்எனின்
ஒன்றின் சிறப்பு தான் அறிதல்வேண்டும்.
இல்லாள் சிறப்பு அறிந்திடின் வேறு
இன்பத்தை நாடுமோ மனம்.!
மங்கலம் என்ப மனைமாட்சி
மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு.
வாழும் முறைமைக்கு வள்ளுவம்
வள்ளுவர் சொன்ன சொல்லே
வாழ்க்கை வழி காட்டி! முற்றும்உணர்க!
மணவாழ்க்கை அமைவதற்கே
மனைவி வாய்க்க வேண்டும்
குலமகளாய் வாய்ப்பதற்கு
கொடுத்து வைக்க வேண்டும்.!
இன்பம் என்பது எது? அதனில்
இன்புற்று இருப்பது எப்போது.
காலையில் இன்பம் மழலை
மாலையில் இன்பம் மனைவி
பகலில் இன்பம் உழைப்பு
இரவில் இன்பம் உறக்கம்
இனிதாய் இதனை உணர்ந்திடின்
நிறைவாய் அமையும் வாழ்க்கை!
நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்
நல்வாழ்வு செழிக்கும் விளைநிலம்
அதன் கூறுகள் இவை எனவே
அறவோர் கூறுவர்! மனதில்கொள்க!
ஆசையே எழுச்சிக்கு வித்து
ஆர்வமே வளர்ச்சிக்குச் சொத்து
உள்ளமே நல்ல விளைநிலம்
உண்மையே உயர்தரம்
உணர்வுகளே இயற்கை உரம் - நல்ல
உணர்வற்றோரே புழு பூச்சிபூசணம்
உள்நுழைய அனுமதியோமே!
உயிர் உணர்ந்து பயிர் காப்போமே!
மனை மாட்சி மண்வளம்
மக்கடச் செல்வம் நீர்வளம்!
ஆன்மா காற்றும் ஒளியாம்
அறிவே காக்கும் வேலியாம்!!
ஆதாரம் நன்றானால்
சேதாரம் இல்லாமல் !
மறுவிடை தேடாமல்
அறுவடை எளிதாமே!!
வாழ்க்கை நாளும் போராட்டமே
வாழ்வாதாரம் கிடைப்பதுதிண்டாட்டமே
வருந்திக் கற்று வளர்ந்துவந்தாலும்
வாட்டம் போக்கிட வழிவேண்டுமே.!நாம்
வாழும் சமுதாயம் மனவளம் கொண்டுள்ளதா? சற்றேஅலசுவோமே.!
பல்கலை பயிலுதலும்
பலதொழில் பயிற்சியும்
பன்முக திறன் பெறுதலும்
பலவகை முயற்சியில்
பன்னாட்டு நிறுவனங்களிவ்
பணிதேடுதலும்
பணி சேர்ந்தபின் உயர்ச்சியும்
பல்வகை ஆராய்ச்சியும்
பாரினில் இன்றைய நடைமுறையே!
பல்கிப் பெருகிவரும்
பன்னாட்டு நிறுவனங்கள்
பணத்துக்காக ஏக்கம் கொள்ளும்
நம் நாட்டின் இளைஞர்கள்!
இங்கு இளைஞர்கள் என்பது
இரு பால் வகையினரே !
ஆணுக்குப்பெண் சரிநிகர் என்று
ஆர்ப்பரிக்கும் உலகில் இரு பாலினரும்
போட்டிக்கிடையே பொருள் தேடும்
தொழில் முனைவர்களே!
இங்கு போற்றிப் பதிந்த
பல்கலைக் கல்வியும் பலவித
பயிற்சியும் தேர்ச்சியும்
பணியில் முயற்சியும் உயர்ச்சியும்
பன்முக ஆராய்ச்சியும்வளர்ச்சியும்
இரு பாலரின் ஒன்றிணைந்த
செயலாற்றலால் மட்டுமே
விண்ணிலும் மண்ணிலும்
எண்ணிலும் எழுத்திலும்
சாதிக்க முடியுமே! வளர்ந்த
வளம் ஈட்டிய நாடுகளுடன்
சமதையாய் வாழ இயலுமே.
சாற்றும் சாதனைக்கு இரு பாலரின்
சான்றாண்மை மிக்க தோழமை
உதவிடுமே!
மாற்றாக நடைபெறும் சிற்சில
நிகழ்வுகள் உள்ளத்தை உறுத்துமே.!
அவை யாவை? அலசுவோமா?
கை தூக்கிக் கும்பிட்டுவாழ்த்தி
வணங்கிய வழக்கம் மறக்கலானதே
கை குலுக்கும் புதுப்பழக்கம்
சின்தனை அற்று வருகை யுற்றதே.
"பாரின்" வழக்குமுறை இன்று
பாரினில் வாழ்க்கைமுறைஆயிற்றே!
பாமரன் கூட பகுத்தறிவோடுவாழுகிறான்
படித்தவனோபண்பாட்டைஇழக்கிறான்
பெண்ணினபெருமை அறியாமூடன்
அன்புப் பேச்சை ஆசையெனஅயிர்த்து
சிரித்து விட்டதில்சிற்றின்பம்எண்ணி,
களிப்பைக்காமமாய்க் கற்பனை செய்வான்.!
காதல் ஒருமுறை தான் பூக்கும்
காவியம் சொல்லும் உண்மை இது
சிலருக்கு மட்டும் நாளும்பூப்பது
சிற்றின்ப காமம் இன்றி வேறென்ன!
மயிலாட்டம் ஒயிலாட்டம்
எழிலாட்டம் மறந்து போனதே
குத்தாட்டம் குடியாட்டம
குலுக்கலாட்டம் கும்மாளம்
கலாச்சார சீரழிவும் வந்துற்றதே
கவலையும் நிதர்சனமானதே!
நாளும் கிழமையும்
பொழுதொரு வண்ணமே
ஆடியாவும் மீடியாவும்
ஊடகமும் வலைதளமும்
சின்னத்திரையும் வெள்ளித்திரையும்
போட்டிப் போட்டுத்தோழமைஉறவை
கொச்சைப் படுத்தி பெற்றவர்வயிற்றிலும்
உற்றவன் உள்ளத்திலும் பயத்தைஏற்றுதே!
உண்மைத் தோழமை நட்புபூணுதல்
கல்வியில் தோழமை கருத்தில்தோழமை
உழைப்பில் தோழமை ஊக்கதிதில்தோழமை
என்றே இணைந்தசெயலால்
விண்ணிலும்மண்ணிலும்
எண்ணிலும் எழுத்திலும்
சாதிக்க முடியுமே!
உயர்வுபெறுவது திண்ணமே!
இறுதியாக இன்முத்துடன்அறிவுடைய
இனிய தோழனுக்கு நம்அறிவுரை. !
உள்ளுவது மனம் கள்ளுவதுகுணம்
துள்ளுவது இளமை எள்ளுவதுபுலமை
கிள்ளுவது ஆசைதள்ளுவதுஅறிவு
விழி தீண்டல் விரல் தீண்டல்
உயிர் தூண்டல் உள்ளம் தூண்டல்
நல்லாள் இல்லாள் இடமே!
அறிவு தூண்டல் ஆக்கம்தூண்டல்
வளர்ச்சி தீண்டல் வெற்றி தீண்டல்!
நல்லாள் தோழி உடனே.!
மாண்புடை மனைவியின் மகத்துவம் அறிந்திடு
தோழி என்பவளும் தொடுஉணர்வு பெண்தானே!
மாதவி என்றால் விலகி இருந்திடு
மா -தவசி என்றால் விரும்பி ஏற்றிடு
எல்லைக்குள் இருந்ததால்
தொல்லைகள் ஏதும் இல்லையே!
அன்னை தந்தை முத்தம் உச்சிவரை
அன்பு இல்லாள் முத்தம்இதயம்வரை
மழலை முத்தம் மனதுவரை
தோழி முத்தம் கையுறை வரையே
வாழும் வழிமுறைக்கு வரையறைஇதுவே!
தோழமை பாவத்தில் இருந்து
நாயகன் நாயகி பாவத்துக்குமாறுவதால்
நிகழும் வாழ்க்கை இழப்புகளை
நிர்தர்சனமாக உணர்த்திய
சிந்து பைரவி திரைப்படம்
சிந்தனை தூண்டும் வரைபடமே!
நாவுக்கு அடிமையாகி
தன்னுடல்நலனுக்கு
தானே எதிரியாகி நாளும்
நரம்புகள் நலிவுறும் மதுவுடன்
நஞ்சை நாளும் உடலில்கூட்டும்
பாஸ்தா பர்கர் பிட்சா புரோட்டா
போக்கு கோக்கு கேக்குடன்
ஊனுணவையும் உண்டு களித்து
உயிர்த் தியாகம் செய்வது சரியா?
உயர் ஒழுக்க குணநலனும்
துயர் இல்லா உடல் நலனும்
எழிர் துலங்கும் மதி வதனமும்
பயிர் வளர்க்கும் தொழுவுரம் போல்
இயற்கை வகை உணவுமுறை வழங்கிடுமே!
யோக ஞானம் வளர்த்திட வழி விடுமே!
மூதுரைகாட்டும் மறை பொருள்
முற்றுமுணர்ந்து நித்தம் தன்னை
வென்றாளும் திறமை பெற்றால்
வாழவில் உயர்வுற்று நிற்போமே!
உளவியல் கூறும் உன்னதபழக்கங்கள்
மனவளம் வளர்க்கும்ஐந்தொழுக்கமும்
நற்பண்பும்யோக ஞானமும்
உளப்பயிற்சியுமே உரியமருந்தாகுமே!
அப்பா! இதுவரை இப்பா படித்தோமே
இப்போது தைரியமாகச் சொல் நீ
நல்ல தோழன் தானா?
ஆக்கியோன்: சமர்ப்பணம் :
கிருஷ்ண சதானந்த விவேகானந்தன்.