சூரிய காந்தி

காந்தி என்னும் ஒளிவேண்டி
காலை மாலை முக்கடலில்
நீந்திப் பார்த்த சூரியனே
நினைத்துப் பார்த்து ஞானத்தால்
காந்தி பிறந்த தினத்தினிலே
காந்தி நினைவு மண்டபத்தை
சேர்ந்தது ஒளியை பெறத்தானே
செங்கதி ராக எழத்தானே

எழுதியவர் : சு.ஐயப்பன் (30-Sep-15, 4:12 pm)
சேர்த்தது : சு.அய்யப்பன்
Tanglish : sooriya gandhi
பார்வை : 218

மேலே