தேனே என்னை இழந்தேனே

அழைத்-தேன் நின்றாய் பார்த்-தேன்
பார்த்-தேன் என்னை மறந்-தேன்

மறந்-தேன் உன்னிடம் விழுந்-தேன்
விழுந்-தேன் உன்னோடு மகிழ்ந்-தேன்

மகிழ்ந்-தேன் உயிராய் நினைத்-தேன்
நினைத்-தேன் காற்றாய் சுவாசித்-தேன்

சுவாசித்-தேன் உன்னையே நேசித்-தேன்
நேசித்-தேன் காதலாய் வாழ்ந்-தேன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (30-Sep-15, 6:48 pm)
பார்வை : 59

மேலே