வண்ணம்

நீல வான் வெளியில்
பச்சை பசேலென
நெற்பயிர்கள்
தலைசாய்ந்து நிற்க கண்டேன்

அலை கடல் பரப்பில்
வெள்ளை வெளேரென
பசும் பால்
பொங்கி திரள கண்டேன்

ஆழ் மன வெளியில்
பல வண்ணங்களில்
காதல் அரும்புகள்
மலர்ந்து மணம்வீச கண்டேன்

கனவு சஞ்சாரத்தில்
காதலிக்கு கட்டும் பொழுது
தாலி கயிறில் கூட
வானவில் வண்ணங்கள் ஒளிர கண்டேன்

எழுதியவர் : கார்முகில் (30-Sep-15, 8:56 pm)
சேர்த்தது : karmugil
Tanglish : vannam
பார்வை : 73

மேலே