கடவுளிடம் கேட்டேன்
கடவுளிடம் கேட்டேன்
சந்தோஷம் அள்ளி தர வேண்டாம்
சோகங்கள் குறைவாய் கொடு
செல்வங்கள் அள்ளி தர வேண்டாம்
வறுமையை குறைவாய் கொடு
நற்பெயரை அள்ளி தர வேண்டாம்
அவபெயரை அளவாய் கொடு
அன்பை அள்ளி தர வேண்டாம்
வெறுப்பை குறைவாய் கொடு
நல்லவை அள்ளி தர வேண்டாம்
தீயவை குறைவாய் கொடு
காதலை அள்ளி தர வேண்டாம்
துரோகங்கள் குறைவாய் கொடு
மொத்தத்தில் என்னை
மகாத்மாவாய் வாழ வைக்க வேண்டாம்
மனிதனாய் வாழ விடு போதும்..