இடமாற்றம்

பிறந்த வீட்டுப் பெருமை பேசும்
பெண்ணாய்
உன்னைப் பற்றி பேசுகிறேன்
கல்லூரி தாயே ..,
எந்நாளும் ஒரு நிமிடம்
உன்னை நினைத்து ஏங்குகிறேன்
மீண்டும் கிடைக்காதோ பசுமையான
நினைவுகள்
புகுந்த வீட்டின் அச்சமும் தயக்கமும்
விலகிட உன் அன்பான அனுபவங்களே
அடித்தளமாய் கொண்டுள்ளேன் ..
மிச்சமுள்ள கல்லூரி நாட்கள்
கடினமாக இருந்தாலும் உன் நினைவுகளை
கொண்டு கடந்திடுவேன் ,
பிறந்த வீட்டின் பெருமையை உயர்த்திடுவேன் ..

எழுதியவர் : rohini (1-Oct-15, 11:15 am)
பார்வை : 87

மேலே