நம்ம கிளாஸ்ல
இன்னிக்கு என் ப்ரெண்ட் சிவாவோட
FB Wall-ஐ பாத்துட்டு இருந்தேன்..
அப்ப தான் நோட் பண்ணினேன்..
எங்க பக்கத்து கிளாஸ்ல படிச்ச
வித்யா அவனுக்கு ப்ரெண்டா
இருந்துச்சு..
அவன் மட்டுமில்ல.. கணேஷ், அருண்,
பிரகாஷ்னு என் ப்ரெண்ட்ஸ் நாலு பேர்
வித்யாவுக்கு ப்ரெண்டா இருந்தானுங்க..
அடப்பாவிகளா..!! ஒருத்தன் கூட எங்கிட்ட
சொல்லியே..!
சரினு வித்யாவுக்கு ஒரு ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்டை
தட்டிட்டு... சிவாவுக்கு போனை போட்டேன்..
" டேய்.. வித்யா உன் ப்ரெண்ட் லிஸ்ட்ல
இருக்குல்ல.. "
" ஆமா.. அதுக்கென்ன..? "
" ஏன்டா எனக்கு சொல்லல..?!! "
" சரி.., ஜெயக்குமார் உன் ப்ரெண்ட் லிஸ்ட்ல
இருக்கானா..? "
" ஜெயக்குமாரா..? யார்ரா அது..??! "
" த்த்தூ... அவன் நம்ம கிளாஸ்ல படிச்சவன்..!! "
# ஓ மை காட்..!!