மோகனும்,குழந்தையும்
மோகன் தன் பெற்றோர் உடன் கண்ணகி எரித்தது போக மிச்சம் உள்ள மதுரைக்கு தன் குலதெய்வ கோவிலுக்கு ரயிலில் சென்னையில் இருந்து சென்றுகொண்டுயிருந்தான்,
தாம்பரம் தாண்டிய உடன் மோகனை அம்மா சாப்பிடவா என்று கூப்பிட,
மோகனும் தனது இருக்கையில் அமர்ந்து இட்லியை தட்டில் வாங்கி உண்ண தொடங்கினான்,
அப்போதுதான் கவனித்தான் எதிர் இருக்கையில் நான்கு வயது பெண் குழந்தையுடன் தாயும் பயணிப்பதை,
அந்த குழந்தையின் தாய் ஜன்னல் ஓரமாக அமர்த்து செல்போனில் யார் உடனோ பேசிக் கொண்டுயிருந்தாள்,
அந்த குழந்தை மோகன் சாப்பிடுவதை கவனித்துக்கொண்டுயிருந்தது,
மோகன் அந்த குழந்தை பார்ப்பதை பார்த்தான்,
அந்த குழந்தைக்கும் இட்லி கொடுக்காலம் என நினைத்தான்,
பின் மனதில் ஒரு எண்ணம் ,
ரயிலில் மயக்கமருந்து கொடுத்து கொள்ளையடிக்கும் நபர்கள் நினைவுக்கு வந்தது,
சரி உணவுகொடுக்க முயன்றால் தவறாக எடுத்துக்கொள்வார்கள்,
என நினைத்து இட்லியை மீ்ண்டும் சாப்பிட தொடங்கினான்,
அப்போது அந்த குழந்தையின் அம்மா போன் பேசி முடித்தாள்,
தன் குழந்தையை கவனித்த அவள் தன் பையில் இருந்து ஒரு பிஸ்கட் பாக்கேட்டை எடுத்து பிரித்து கையில் கொடுத்தாள்,
அதை வாங்கிக் கொண்ட குழந்தை அதில் இருந்து ஒரு பிஸ்கட் எடுத்து மோகனிடம் வந்து இந்தாங்க மாமா சாப்பிடுங்க என்றது,
மோகனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது,
பல நேரங்களில் நாம் பெரியவர்கள் நமக்கு எல்லாம் தெரியும் நாம் சரியாகதான் எல்லாம் செய்வோம் என்ற எண்ணம் வேண்டாம்
நாம் குழந்தைகள்யிடம் நிறைய கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்