April 30, 2011

குதூகலம் !
உயிரில் கலந்துவிட்ட உறவு
பிரிந்து செல்லும் ஒரு மாலை பொழுதில்
காதலன், நேற்று வரை என்னுடன்
இன்று, தன் நாடு திரும்பும் இப் பொழுதில்
அவன் முகம் முழுக்க மகிழ்ச்சி
..அதை காணும் பொழுது !!
காதல்..!
அவனுடைய ஆசைகள்
எப்பொழுது என் குறிக்கோள் ஆனது?!
அவன் சோகம்
ஏன் என்னை துன்பத்தில் ஆழ்த்துகிறது?
அவன் சிரிப்பில் அப்படி என்ன! என் மனம்
பறிப்போனது !!!
இறைவா...!
இரண்டு வேண்டுகோள்கள் !!
ஒன்று!
என்றும் அவன்
அவனாகவே இருக்க வேண்டும் !
இரண்டு!
அவனை நான் அவனுக்காகவே
காதலிக்க வேண்டும் !