கலையழகி

அழகிகளில் பேரழகி
ஆள்மயக்கும் கண்ணழகி
பழச்சாறு மொழியழகி
பனிபோன்ற குளிரழகி

சாமந்திப் பூவழகி
சந்தன நிறத்தழகி
சாமத்திலே எழுப்பிவிடும்
சருமஎழில் மணத்தழகி

துளிர்விட்டு ஆடுகின்ற
துடியிடை கொடியழகி
அள்ளியே அணைத்திடவே
அதிசயம் தருமழகி

தேன்சிந்தும் இதழழகி
தெவிட்டாத சொல்லழகி
கான்வாழும் மான்போல
கண்பார்வை விழியழகி

கார்மேகம் கூந்தலிலே
குடிகொண்ட குழலழகி
போர்க்களத்தை மனதினிலே
புகுத்திவிடும் உடலழகி

முயல்பான்று தலைதூக்கி
முன்னழகில் சிலைதேக்கி
கயலாடும் கண்ணிரண்டை
காட்டிடும்நீ கலையழகி

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : (2-Oct-15, 7:22 pm)
பார்வை : 154

மேலே