காந்தியே மகான்

நல்ல வேளை....
காந்தி அன்று ரயில் ஏறினார்....
நம்மால் இன்று விமானத்திலும்
பறக்க முடிகிறது.

-----------------------------------------------
காந்தியின் கைத்தடி
எப்போதும் பேசவில்லை....
சத்தியமும், மௌனமுமே
அவரது வாய்மொழியானது....
எனவேதான் அந்த
ஆத்மா மகாத்மாவானது.

-------------------------------------------------
சத்திய சோதனைகள் தாண்டி,
பொறுமையும்,அஹிம்சையும்
துணையாய் கொண்டு,
துப்பாக்கி முனையையும்
மலர் கொண்டு மூடினார்....
அன்பெனும் ஆயுதத்தாலே
ஆணவத்தை வேரறுத்தார்...

அவரன்றி நமக்கு
நல்வாழ்வு இல்லை.....
இந்தியா எனும் குடும்பத்திற்கு
அவரே என்றென்றும் தந்தை.
------------------------------------------------

எழுதியவர் : செந்ஜென் (2-Oct-15, 11:42 pm)
பார்வை : 3119

மேலே