கவித்துளிகள் - 2
கவித்துளிகள் - 2
கற்பனை விதையில்
முளைத்த கதை - கவிதை !!!
எதிர்பார்ப்பிற்கும்
எதார்த்தத்திற்கும்
இடையே நின்ற
இடைவெளி - ஏமாற்றம் !!!
வரையறை இல்லாத
நிறைவை நோக்கிய
நிகழ்கால பயணம் - வாழ்க்கை !!!
கரை மோதும்
கடல் அலைகள்...
காலம் தரும் - இன்பதுன்பங்கள் !!!
கடல் அலையில்
துள்ளி ஆடும்
காகித ஓடம் - இளமை !!!
- பா.வெ.