என்னை கொல்லாதீங்க

என்னை கொல்லாதீங்க... மக்களே
என்னை கொல்லாதீங்க...!
நீங்கள் நுகரும் ஓர்வாயு - அதுவே
நான் தரும் உயிர்வாயு!

நான் சுவாசிபதோ கரிமிலவாயு -அதுவே
நீங்கள் தரும் கழிவுவாயு...
சுற்று சூழலை வளர்பவன் நான்
சுகாதாரத்தை காப்பவனும் நான்...!

வான் முட்ட வளர்ந்து நின்று
இளைப்பார இடம்தருவதும் நான்...
தோள் கொடுக்கும் நண்பனைப்போல்
துவளாமல் இருப்பதும் நான்...!

என்னை கொல்லாதீங்க... மக்களே
என்னை கொல்லாதீங்க...!
செங்கதிரோன் ஒளியைப்பெற்று
உணவை உற்பத்தி செய்பவனும் நான்
வானில் பொழியும் மழையும் கூட
மண்ணில் விழுவதும் எந்தன் கூட்டத்தில்....!
நான் அசைந்தால் நீ சிரிப்பாய்..
நான் நின்றால் நீ அழுவாய்..!
என்னால் பெற்ற சுகத்தை - நீ
ஏன் மறந்தாய் மனிதா நீ...!

கூடு கட்டும் குருவி கூட
குடும்பம் நடத்துவது என்னிடம்தான்
விலங்குகள் தின்னும் தழைகூட
தீவனமாவதும் என் இலைதான்...!
அழுகினாலும் உரமாகும் நான்
அழுதாலும் உயிர் நண்பன் ஆவேன்...!
என்னை கொல்லாதீங்க... மக்களே
என்னை கொல்லாதீங்க...!

இறைவன் கூட என்னிடத்தில்
இறைபெருபவனும் என்னைசுற்றி
இன்னலை தீர்த்து வரும் - நான்
இனிமையாவனும் உன்னை சுற்றி..!
தெருவோரம் நான் நின்றால்
தினந்தோறும் மக்கள் கூட்டம்
விண்ணிலே மேகக் கூட்டம்
மண்ணிலே பசுமைக் கூட்டம்..!
வீடு தோறும் வாசலாய் நான்
அடுப்பெரிந்தால் கரியவதும் நான்...!
காய்கனிகள் தந்து மகிழும் - மக்களே
மழைக்காக என்னை கொல்லாதீங்க..!

எழுதியவர் : ரவி Shrinivasan (3-Oct-15, 10:41 am)
பார்வை : 231

மேலே