உனக்கு தெரியாது

ஏமாற்றுவது என்னவோ சில பெண்கள் தான்
ஆனால்
ஏமாறுவது என்னவோ பல ஆண்கள் தான்

பெண் சாபம் பலிக்குமோ என்னவோ
ஆனால்
பெண் காதல் பழிவாங்கும்


கண்களால் கைது செய்யும்போது தெரியாது

காதல்சிறையில் தள்ளும்போது தெரியாது

காதல்கடிதம் என்ற பெயரில் உனக்காக அவளே ஓர் தற்கொலை கடிதம் எழுதி எம தூதுவராக வரும்போது தெரியாது

உனக்கு என்ன வேண்டும் என்று அவள் கேட்கும் போது
கண்ணத்தில் முத்தம் என்று நீ சொல்லும் போது
உனக்கு தெரியாது
அதுதான் உன் கடைசிஆசை என்று

கடைசியில்
கல்யாணப்பத்திரிக்கையை உன் கையில் கொண்டுவந்து தரும்வரை உனக்கு ஒன்றுமே தெரியாது

உண்மையில் சில பெண்கள் மனதில் என்னதான் இருக்கு
யாருக்குதெரியும்
அதை அறிய முயன்றால் இந்த ஜென்மமும் வீணாய்முடியும்

மொத்ததில்
காதல் என்பது திட்டமிட்ட படுகொலை
கொலையாளிக்கு விடுதலை
கொலையுண்டவனுக்கு எமலோகத்தில் சிறை

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (3-Oct-15, 9:01 pm)
சேர்த்தது : அரவிந்த்
Tanglish : unaku theriyaadhu
பார்வை : 334

மேலே