ஊருக்கு போக வழி தெரியவில்லை

வந்த வழி மறந்து விட்டது ஊருக்கு போக வழி தெரியவில்லை
நேரம் கடக்க. நெஞ்சுக்குள் அச்சம்
புதிய மனிதர்கள் பல வித முகங்கள்
உதவி கேட்டிட தயக்கம் உதவ மறுப்பார்களோ என்று
கரை ஒதுங்கும் நிலவு கடலுக்குள் செல்லும் சூரியன்
தொண்டையில் தாகம் இருக்க கால் தொடும் கடல் அலைகள்
கண்ணீர் வலிய தாயை கண்டு கட்டி நிற்கிறேன் மகிழ்வோடு இப்பொழுது