என்னவளே அடி என்னவளே

பெண்ணவளே அடி பெண்ணவளே
உன் கண்களில் விழுந்துவிட்டேன்,,,
சொன்னவளே பதில் சொன்னவளே
உந்தன் காதலில் கரைந்துவிட்டேன்...
நிரம்பி வழியும் காதலை
உன்மேல் ஊற்றிவிட்டேன்
உன் மடியினில் சாய்கையில்
சொர்கத்தை கண்டுகொண்டேன்

கதிரொளியும் அந்த நிலவொளியும்
உன்முன் தோற்றே போகுமடி
விண்வெளிபோல் உந்தன் கண்ணொளியில்
வேதியல் மாற்றம் நிகழுதடி

உடனிருந்தால் உன்னுடநிருந்தால்
வருஷமும் நிமிஷமடி
அருகிலே நீ இருப்பதுபோல்
ஒரு காணலும் தோன்றுதடி

வாழ்வையும் என் சாவையும்
உன்னருகிலே ஏங்குதடி
நொடிகளும் மனக்கொடிகளும்
உன்மடியினில் தேங்குதடி ...

வானவில்லே உன் வளைவுகளில்
எனைநான் ஒளித்துக்கொள்வேன்
என் மார்பிலே உன்னை சாய்த்துக்கொண்டு
உன் கூந்தலை கோதிடுவேன்
மின்மினியே உந்தன் உடலொளியில்
நம் இரவினை சலித்திடுவேன்
உறக்கம் வந்து எனை அழைத்தாலும்
உறங்காமல் உனை ரசித்திடுவேன்

என்னாசையை உன் காதுக்குள்ளே
கவிதையாய் சொல்லிடுவேன்
கவிதையை உண்மையாய்
தினம்தினம் மொழிபெயர்ப்பேன்

களைப்பிலே உனக்கு வேர்வை வந்தால்
என்னிதழ் கொண்டு நீக்கிடுவேன்
மயிலிறகை உன்மேல் கூசி
உன்சோர்வை கலைத்திடுவேன்
பெண்கடலே உன்னில் மூழ்கி
தினம்தினம் முத்தெடுப்பென்
அருகினிலே நீ இருந்துவிட்டால்
தினம் புதுபுது கவிபடைப்பேன் ....

தொலைவிலே உன்னை பார்த்ததுமே
தொடுவானம் ததும்பிடுமே
அருகிலே நீ வந்துவிட
மன அலைகளும் அலைந்திடுமே

எழுதியவர் : அர்ஷத் (4-Oct-15, 7:23 am)
பார்வை : 423

மேலே