என் கிளியோபட்ரா

          கிளியோபாட்ரா நீ

நின் கரம் பட்டு கொய்த மலர்கள்
உயிர் விட்டும் 
நின் கூந்தலில் அழகாய் 
உயிர்பெற்று சிரிப்பதைப் போல்

உன் கரம் பட்டு கொய்தலில் 
உயிர்விட்ட கனிகள் 
உன் இதழ்களில் 
உயிர்பெற்றதைப் போல்

உன் விரல் பட்டு அறுபட்ட
காய்கறி கள் உயிர்விட்டும் 
உன் நாவிற்கு
சுவைஊட்டுவதைப் போல்

உன் விரல் பட்டு வரைந்த 
உயிரற்ற ஓவியம் 
உனைக் காண
உயிர்பெற்றதைப் போல்

அதுவரை புயலாய் வீசிவந்த காற்றும்கூட
உன் மேனி தீண்டி கடந்தபின்
தென்றலாய் மாறுவதைப் போல்

அழகின் அழகியலே
என் கிளியோபாட்ரா....
உன் நினைவால் எனை நினைத்து
மோட்சம் பெறச் செய்வாயா?

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (4-Oct-15, 3:26 pm)
பார்வை : 246

மேலே