இது ஒரு இனிய சுமை சிறுகதை
பருவ வயதில் அரும்பிய காதலுக்கு ஆயுள் குறைவு என்றாலும் அதன் நினைவலைகள் பெரும்பாலும் நெஞ்சை விட்டகலாத இனிய சுமையாக பதிந்து விடுவது எதார்த்தமே.. அவனுக்குள்ளும் அப்படித்தான், பட்டப்படிப்பு முடித்து நண்பனின் மெபைல் கடையில் உதவியாளனாக பொழுதை கழித்துக்கொண்டிருந்த சமயம் , போக்குவரத்து வசதியற்ற அவனுடைய கிராமத்திலிருந்து சற“று தொலைவில் பக்கத்து கிராமத்தின் எல்கைப்பகுதியில் தான் அவளை முதன் முதலில் சந்தித்தான். அவள் பெரும் பேரழிகி அல்ல. எனினும் அந்த எளிமையும் எதார்த்தமும் தான் அனை ஈர்த்தது. மு்னபெல்லாம் யாரோவாக தெரிந்தவள் இப்போதெல்லாம் எல்லாமுமாக தோன்றினாள். அவளுக்கும் இவன் மீது பிரியம் உண்டென்பதை இவனாலும் உணர முடிந்தது.அடிக்கடி சந்தித்தும் ஏனோ மவுனமே மொழி பேசியது. யாருமற்ற குறுகலான பாதையில் அன்றாடம் சேர்ந்து பயணித்த போதும் அவளிடம் பேச்சுக்கொடுக்க மனமென்னவோ செய்தது இவனுக்குள். அத்தனையும் கவனித்தும் கண்டுகாது போல ஓரப்பார்வை வீசி மட்டும் செல்வதும் அவளுக்கு வாடிக்கையாகியிருந்தது. அடுத்த சில நாட்கள் தேர்வு கால விடுப்பு என்பதால் அவளை சந்திக்க இயலாமல் போனது. அது ஒன்றும் அவ்வளவு பெரிய இழப்பாகவும் கருதவில்லை. அவன். அடுத்த வாரம் வாய்ப்புக் கிடைத்ததும் சொல்லிடனும் என்று சிந்தையுள் எண்ணியிருந்தான்.விதிவசமோ எண்ணவோ அவன் எப்போதோ விண்ணப்பித்த சம்பந்தமாக அயல்தேசம் செல்ல வேண்டிய அவசர கூழலில் சிறு கவிதை புத்தகமொன்றை அவளது தோழியிடம் கொடுத்து விட்டு சொன்னான், ”அவ கிட்ட கொடுத்திரு ” என்று,
அந்த புத்தகத்தின் முதல் பக்கத்தில் சிவப்பு மையினால் சில வரிகள் எழுதியிருந்தது.
என்னை திரும்பி பார்த்தவளும்
திரும்பி பார்க்கவைத்தவளும்
நீ மட்டும் தான் - என்று
.........
காலமும் ஓடிவிட்டது.
அவளை சந்திக்கவோ, அவளை பற்றி தெரிந்து கொள்ளவோ வாய்ப்புகள் மட்டும் கிட்டிட வில்லை அவனிடம்.
இந்த ஆறாண்டுகளில் தொலைந்து போன நேசத்தின் நினைவுகள் எப்போதாவது வந்து நெருப்பாக சுட்டுக்கொண்டிருந்தன..........