வாழ்வின் விழுதுகள்

பிரிவால்
வருந்துபவர்கள்
சேராமல்
இருந்தவர்கள் தான்!
வருந்தாமல்
இருப்பவர்கள்
பிரிவில்
குளிர் காய்பவர்கள் தான்!
சேர்வதை
விரும்புவர்கள்
உணர்வில்
உருகுபவர்கள் தான்!
உறவை
மதிப்பவர்கள்
பிரிவை
வெறுப்பவர்கள் தான்!
உறவுகளை
ஒட்டுங்கள்,
விரிசல்களை
சரி செய்கையில்
வாழ்க்கை இனிக்கும்
வாசல் தாண்டியும்....
பார்வைகளை
திருத்துங்கள்,
கேளுங்கள்
மௌனித்து,
பேசுங்கள்
வலியச்சென்று....
வாழ்க்கையை
தேடாதீர்கள்,
அது
வெளியில் இல்லை,
உங்களிடம் தான்
ஒளிந்து மறைந்து
முடங்கிக்கிடக்கிறது !
கண்டு பிடியுங்கள்
உங்கள் வாழ்வை,
அதன் விழுதுகளை,
உறவுகளையும் தான்...