கல்லறையின் பிம்பம்

வழமையான பயணங்கள் தாம் - ஏனோ
அன்றிலிருந்து வேறுபட்டு தோன்றியது

இது வரை இல்லாத
மரண சாசனத்தின் நினைவுச் சின்னமொன்று
ஊன்றப்படுகிறது இன்று,

எப்போதுமான பாதைகள்தாம் - எனினும்
எதார்த்தமாக கடந்திட முடியவில்லை

யாரோ சிலருடைய
குருதி சிந்தி உயிர் விழுங்கப்பட்ட
கொடூரத்தின் அடையாளத்தை
கம்பீரமாய் சுமந்து நின்றது

சாலையோர ”விபத்து பகுதி” பலகைகள்
கல்லறையின் பிம்பமாய்
மரண வாசம் பரப்பியவாறு.......

எழுதியவர் : ஹஸீனா அப்துல் பாசித் (4-Oct-15, 3:21 pm)
Tanglish : kallarayin pimbam
பார்வை : 92

மேலே