தெரிந்து கொள்வோமே - 4

தெரிந்து கொள்வோமே - தீபாவளி

1. மஹாராஷ்ட்ரா, உ.பி மாநிலங்களில் தீபாவளியை எதை முன்னிட்டு கொண்டாடுகிறார்கள்?
2. வங்காளத்தில் தீபாவளியை எதை முன்னிட்டு கொண்டாடுகிறார்கள்?
3. குஜராத்தில் தீபாவளியை எதை முன்னிட்டு கொண்டாடுகிறார்கள்?
4.ராஜஸ்தான், ம. பி, டெல்லி மாநிலங்களில் தீபாவளி எதை முன்னிட்டு கொண்டாடுகிறார்கள்?
5. பஞ்சாபில் தீபாவளியை எதை முன்னிட்டு கொண்டாடுகிறார்கள்?
6.யக்ஷ்ராத்திரி, அகராத்திரி எனபவை என்ன?
7.முற்காலத்தில் தீபாவளி யாருக்காக கொண்டாடப்பட்டது?

விடைகள்

1. மஹாவிஷ்ணு வாமனாவதாரம் எடுத்த நாள்
2.மஹாதுர்கையை சிவபெருமான் அட்க்கி அமைதி படுத்திய நாள்
3.ஸ்ரீ கிருஷ்ண பகவான் இகலோக வாழ்வை நீத்து வைகுண்டம் ஏகிய நாள்
4.மஹாவிஷ்ணு பூலோகத்திற்கு வந்த நாள்
5.நசிகேசனுக்கு எமன் உயிர் பிச்சையும்,சாவித்திரிக்கு புத்திரவரமும் அளித்த நாள்
6.தீபாவளியைக் குறிக்கும்
7. குபேரனுக்காகக் கொண்டாடப்பட்டது.


தெரிந்து கொள்வோமே!!- எண்கள்
பதில்கள் எண்கள் தான்!!!

1. தேவாரத் திருமுறை எத்தனை?

2. சுசீந்திரம் கோவில் ஆஞ்சனேயர் எத்தனை அடி?

3.ஆதிசங்கரர் எத்தனை வயது வரை வாழ்ந்தார்?

4.இதயத்திலிருந்து எத்தனை நாடிகள் பிரிவதாக சாஸ்திரம் கூறுகிறது?

5.அரிச்சந்திரன் சூரிய வம்சத்தில் எத்தனையாவது சந்ததி?

6. பிரம்ம முகூர்த்தம் எனபது எந்த நேரம்?

7.காஞ்சியில் உள்ள திவ்யதேசத்தில் எண்ணிக்கை?

8.வருடத்தில் எத்தனை ஏகாதசிகள்?

9.ஆண்டாள் திருப்பாவை பாடிய தேதி என்ன என்று கணிக்கப்பட்டுள்ளது?

10.சிவபெருமானின் வடிவங்கள் எத்தனை?

விடைகள்

1.7
2.18
3. 32
4. 108
5.24
6.3.30-5.30
7.14
8. 24
9.18-12-731
10.64

தெரிந்து கொள்வோமே - பொருத்துக

1.திருஞானசம்பந்தர் அவதரித்த இடம் - திருக்கடையூர்
2.மார்கண்டேயர் வழிபட்ட தலம் - பதுமகோமளை
3.ருத்திராட்சத்தில் இன்னொரு பெயர் - திருச்செந்தூர்
4. அகத்தியரின் மனைவி - வேங்கடநாதன்
5. ஆதிசங்கரர் சுப்பிரமண்ணிய புஜங்கம் பாடிய இடம் - சீர்காழி
6. சூரபத்மனின் மனைவி - லோப முத்திரை
7. தேவவிரதன் - திருவெண்காடர்
8. சனிபகவானின் மனைவி - நீலாம்பரி
9. ராகவேந்திரரின் இயற்பெயர் - கண்டி
10. பட்டினத்தாரின் இயற்பெயர் - பீஷ்மர்

பதில்கள்

1.திருஞானசம்பந்தர் அவதரித்த இடம் - சீர்காழி
2.மார்கண்டேயர் வழிபட்ட தலம் - திருக்கடையூர் (famous for mrithunjaya homam)
3.ருத்திராட்சத்தில் இன்னொரு பெயர் -கண்டி
4.அகத்தியரின் மனைவி - லோப முத்திரை
5.ஆதிசங்கரர் சுப்பிரமண்ணிய புஜங்கம் பாடிய இடம் - திருச்செந்தூர்
6.சூரபத்மனின் மனைவி - பதுமகோமளை
7.தேவவிரதன் or தெய்வவிரதன் - பீஷ்மர் (சிறப்பு மிக்க விரதத்தைக் கொண்டவர்)
8.சனிபகவானின் மனைவி - நீலாம்பரி
9.ராகவேந்திரரின் இயற்பெயர் - வேங்கடநாதன்
10. பட்டினத்தாரின் இயற்பெயர் - திருவெண்காடர்

தெரிந்து கொள்வோமே!!

1. திருக்கோவில்களில் வழிபடும் லிங்கம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
2.திருவாதவூர்- பெயர்க்காரணம் தருக
3. விடங்கர் என்றார் என்ன? அவற்றில் சிலவற்றைக் குறிப்பிடுக
4. கோபுரத்திற்கு தமிழ்ப் பெயர் என்ன?
5.காஞ்சிபுரத்தின் முக்கியமான சிறப்பு என்ன?
6. சிவபெருமான் குருவாக, முருகன் சீடனாக எங்கு காட்சியளிக்கிறார்கள்?
7. சிவபெருமான் சீடனாக, முருகன் குருவாக எங்கு காட்சியளிக்கிறார்கள்?
8. இறைவனின் திருவுருவம் எத்தனை கோலங்களில் செய்யப்படுகிறது?அவை யாவை? அவற்றின் பயன் என்ன?
9. வேடுபறி எனறால் என்ன?
10.நவவியாகரண பண்டிதன் என்பது யாரைக் குறிக்கும்?

விடைகள்

1.ஐந்து.
சுயம்பு லிங்கம் - தாமாக உருவானது
காண லிங்கம் - விநாயகர்,முருகன் தெய்வங்களால் உருவானது
தைவிக லிங்கம் - ப்ரம்மா,விஷ்ணுவால் உருவானது
மானுட லிங்கம் - மனிதர்களால் உருவானது
2.வாயுதேவன் வணங்கியதாலும்,சனி பகவான் கால்வாதம் இங்கு நீங்கியதாலும் இப்பெயர்.
3.உளியால் செதுக்கப்படாத இறையே விடங்கர் எனப்படும்.
நாகவிடங்கர் - திருநள்ளாறு சிவன்
வீதிவிடங்கர் - திருவையாறு சிவன்
ஆதிவிடங்கர் - திருக்காறாயில் சிவன்
நிலவிடங்கர் - திருவாய்மூர் சிவன்
புவனிவிடங்கர் - திருமறைக்காடு சிவன்
4. மண்ணீடு
5. காஞ்சியில் மூன்று இரவு தங்கினால் மோக்ஷம் கிடைக்கும் புண்ணியம் வரும்.
6.செஞ்சேரிமலை
7.சுவாமிமலை
8.மூன்று.
நின்ற கோலம் - உற்சவங்களில் நின்ற கோலத் திருவுருவம் பயன்படுத்தப்படுகிறது.
கிடந்த கோலம் - கோயில்களில் உள்ளவை.
அமர்ந்த கோலம் - இல்ல வழிபாடு, கடவுள் மங்கலம் செய்யப் பயன்படுகிறது.
உதாரணங்களுக்கு பின்னூட்டப்பகுதியில் "om tat sat" பதிலகளைப் பார்க்கவும்.
9. பொதுவாக முருகப்பெருமான் வள்ளியை சிறையெடுத்ததைக் கொண்டாடும் விழாவாகும். திருமங்கை மன்னன் திருமாலை வழிபறிக்க முயன்றதைக் கொண்டாடும் விழாவும் உண்டாம். விவரம் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.
10. ஆஞ்சனேயர் - சூரிய பகவானிடம் கல்வி கற்றார்

தெரிந்து கொள்வோமே!! - நீர்

1. ஸநானம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
2.ஆக்நேய ஸ்நானம் என்பது என்ன?
3. மானச ஸ்நானம் எனபது என்ன?
4.மிருத்திகா ஸ்நானம் எனபது என்ன?
5.பாற்கட்லில் இரண்டாவதாக (முதலில் ஆலகாலம்) வந்தவை எவை?
6. வில்வம் எப்படித் தோன்றியது?
7.ஆமல தீர்த்தம் எனபது என்ன?
8.கங்கா ஸ்நானம் செய்வதின் சிற்ப்பு என்ன?
9.தீர்த்தம் கொடுக்கப்ப்டும் சிவன் கோவில் எது?
10. கடல்நுரையால் ஆன பிள்ளையார் எங்கு உள்ளார்?


விடைகள் :

1. 6 வகைப்படும்.
நித்தியம் - தினமும் குளிப்பது
நைமித்திகம்- தீட்டு நீங்க ஸ்நானம் செய்வது.
காமியம் - கிருத்திகை போன்ற நாட்களில் புண்ணிய நீராடுதல்.
கிரியாங்கம் - பித்ரு காரியங்களின் பொருட்டு நீராடுதல்
மலாபகர்ஷணம்- எண்ணை தேய்த்துக் குளித்தல்
கிரியா ஸ்நானம் - புண்ணிய நதி, தீர்த்தங்களில் நீராடுதல்
இவை தான் அந்த ஆறு வகையா எனபதில் எனக்கு ஐயம் உள்ளது. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும்.
2. உடம்பெங்கும் விபூதியை அணிந்து கொள்வது.
3.பிரணவ தியானம்.
4.திரு மண்ணை (ஆலயங்கள் போன்ற இடங்களில் உள்ள) உடம்பெங்கும் பூசிக்கொள்வது.
5.காமதேனு; உசசைஸ்ரவஸ் என்ற வெள்ளை குதிரை
6.பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமியின் கைகளில் இருந்து வந்தது
7. காவி ரியைக் குறிக்கும்
8. 10 அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும்
9.இராமேஸ்வரம்.
10.திருவலஞ்சுழி

இவர்கள் யார்?

1. வாதாத்மஜன்
2.சௌமித்ரி
3.வைனதேயன்
4.ரிபுமர்தனன்
5. தாதன்
6.சுரபதி
7.லம்போதரன்
8.குஹன (ramayana guhan illa)

விடைகள்

1.வாத (வாயு)+ ஆத்மஜன் (பிறப்பு) - ஹனுமான்
2. சுமித்ராவின் (சுமத்ரா நாட்டவள்) மகன் - லட்சுமணன்
3. வினதையின் மகன் - கருடன்
4.ரிபு (வலுவிழப்பு) + மர்தனன் ( ஆட்கொள்பவன்) - சத்ருக்னன்
5 கொடுத்தவன் (கண்ணனுக்கு சியமந்தக மணியை அளித்தவர்)- ஜாம்பவான்
6. தேவர்களின் தலைவன் - இந்திரன்
7. பெரிய வயிரை உடையவன் - விநாயகர்.
8. இதயத்தில் குடிகொண்டவன் - முருகன்

தெரிந்து கொள்வோமே!! -17 நவராத்திரி

இம்முறை புரட்டாசி மாதத்தில் விஜயதசமி (10வது நாள்) அன்று திருவோண நட்சத்திரம் வருவதால் பெருமாளுக்கு மிக விசேஷம்..விரதம் இருக்க விரும்பினால் இருக்கலாம். மாவிளக்கு ஏற்ற விரும்பினால் அதுவும் நல்லது..

முதல் நாள் தேவியின் பெயர் : மஹேஸ்வரி பாலா
அர்ச்சிக்கவேண்டிய மலர் : மல்லிகை
இலை : வில்வம்
ராகம் : தோடி

இரண்டாம் நாள் தேவியின் பெயர் : கவுமாரி குமாரி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : முல்லை
இலை : துளசி
ராகம் : கல்யாணி

மூன்றாம் நாள் தேவியின் பெயர் : வராஹி கன்யா கல்யாணி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : சம்பங்கி
இலை : மருது
ராகம் : காம்போதி

நான்காம் நாள் தேவியின் பெயர் : மஹாலக்ஷ்மி ரோகிணி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : ஜாதி
இலை : கதிர்ப்பச்சை
ராகம் : பைரவி

ஐந்தாம் நாள் தேவியின் பெயர் : வைஷ்ணவி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : பாரிஜாதம்
இலை : விபூதிப்பச்சை
ராகம் : பந்துவராளி

ஆறாம் நாள் தேவியின் பெயர் : இந்திராணி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : செம்பருத்தி
இலை : சந்தன இலை
ராகம் : நீலாம்பரி

ஏழாம் நாள் தேவியின் பெயர் : மஹாசரஸ்வதி சுமங்கலி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : தாழம்பூ
இலை : தும்ப இலை
ராகம் : பிலஹரி

எட்டாம் நாள் தேவியின் பெயர் : நரசிம்ம தருணி
அர்ச்சிக்கவேண்டிய மலர் : ரோஜா
இலை : பன்னீர் இலை
ராகம் : புன்னாகவராளி

ஒன்பதாம் நாள் தேவியின் பெயர்: சாமுண்டி மாதா
அர்ச்சிக்கவேண்டிய மலர் : தாமரை
இலை : மருக்கொழுந்து
ராகம் : வசந்தா

1.கொல்லூரின் ஆரம்ப மற்றும் இடைக்காலப் பெயர் என்ன?
2 இங்கு தவம் செய்த முனிவரின் பெயர் என்ன?
3. இங்கு தேவி மூகாம்பிகை ஏன் அப்பெயர் பெற்றாள்?
4. இத்தலத்திற்கு ஏன் சப்த அமிர்த தலம் என்ற பெயர்?
5. இக்கோவிலில் விக்ரகப் ப்ரதிஷ்டை செய்தது யார்?
6. இங்குள்ள விசேஷமான ப்ரசாதம் என்ன?
7. இங்குள்ள கணபதியின் உருவச் சிறப்பு என்ன?
8. சாரதா நவராத்திரி, மஹா நவராத்திரி, வசந்த நவராத்திரி என்பவை எப்போது வரும்?
9. நவராத்தியில் பாட விசேஷமான நவாவக்ன கீர்த்தனையைப் பாடியவர் யார்?
10. விஜய தசமி என்று கொண்டாடுகிறோம்?

விடைகள்

1. மஹாரண்யபுரம்;கோலபுரம்
2. கோலமஹரிஷி
3. மூகாசுரன் என்ற அரக்கனை வதைதததால்
4.மூர்த்தி, தீர்த்தம்,தலம், ஆரண்யம், விமானம், மண்டபம்,நதி ஆகிய ஏழும் அமைந்த்தால்.
5.ஆதிசங்கரர்
6.மதியம் - புடி சாந்தி; இரவு- கஷாய தீர்த்தம்.
7.பஞ்சமுக கணபதி
8. சாரதா நவராத்திரி - புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்
மஹா நவராத்திரி- தை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்
வசந்த நவராத்திரி - பங்குனி அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்
9. முத்துசுவாமி தீட்சிதர்
10.புரட்டாசி மாதம் சுக்ல பட்சம் தசமி

தெரிந்து கொள்வோமே -16 அழகு!!

1. திருவாரூரில் எது அழகு?
2. திருவிடைமருதூரில் எது அழகு?
3. மன்னார்குடியில் எது அழகு?
4. தஞ்சாவூரின் பழைய பெயர் என்ன?
5.முருகு என்பதன் பொருள் என்ன?
6.மன்மதனின் அம்புகளின் பெயர் என்ன?
7.பெண்டிற்கு அழகு என்ன என்று ஒளவையார் கூறியுள்ளார்? எதில்?
8. அழகின் சிரிப்பு- இதை எழுதியவர் யார்?
9. அழகு அலைகள் என்று பொருள் படும் ஆதிசங்கரரின் படைப்பு எது?
10.அழகர் என்பது யாரைக் குறிக்கும்?அழகர் கோவில் உற்சவர் பெயர் என்ன?

விடைகள்:

1.திருவாரூரில் தேர்
2. திருவிடைமருதூரில் தெரு
3. மன்னார்குடியில் மதில்
4. தஞ்சாவூர் - அழகாபுரி
5. அழகு
6. 5 மலர் அம்புகள் - தாமரை அம்பு, மாம்பூ அம்பு, அசோக மலர் அம்பு,முல்லை அம்பு, நீலோற்பல அம்பு
7. உண்டி சுருங்குதல். கொன்றை வேந்தன்.
8. பாரதிதாசன்
9.சௌந்தர்ய லஹரி
10. திருமால். சுந்தரராஜப் பெருமாள்.

விநாயகர் யாரை சம்ஹாரம் செய்து மூஞ்சூரை வாகனமாகக் கொண்டார் எங்கு? கஜமுகாசுரன் - திருச்செங்காட்டங்குடி

தெரிந்து கொள்வோமே !!! -15

1.சுவாஹா என்பவள் யார்?
2.சூரியனின் ரதத்தை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளின் பெயர்கள் என்ன?
3.குருபகவானின் சிற்ப்பு என்ன?
4.ராகு பகவானுக்கு உகந்த நாள் எது?
5.சனிபகவானின் அதிதேவதை யார்?
6.ஆதி புரி என்று அழைக்கப்படும் நகரம் எது?
7.புதன் பகவானை வழிபட்டால் என்ன நனமை உண்டாகும்?
8.வியாழனின் வாகனம் என்ன?
9.குருபகவான் கோவில் கொண்டுள்ள ஊர் எது?
10.சூரியனின் பெருமையை உரைக்கும் நூல் எது?

விடைகள்:

1. சுவாஹா அக்னியின் மனைவி.
2.7 குதிரைகள் - காயத்ரி, ப்ருஹதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஷ்டுப், அனுஷ்டுப், பங்க்தி.
3.குருபகவான் தீமை செய்பவரை தன் பார்வையால் நிறுத்தி விடுவார்.
4. ஞாயிறு
5. யமன்
6. திருநள்ளாறு
7.கல்வி ஜோதிடம் கணிதம் மருத்துவம்- இவற்றைப் பெருக்குவார்.
8.யானை
9. ஆலங்குடி
10. ஆதித்யஹ்ருதயம்

தெரிந்து கொள்வோமே - விநாயரைப் பற்றி - 2

1.விநாயகர் யாரை சம்ஹாரம் செய்து மூஞ்சூரை வாகனமாகக் கொண்டார்? எங்கு?
2.ஒளவையாருக்கு மூப்பு அளித்தது யார்?அவரை ஒளவையார் எந்த ஊரில வணங்கி வந்தார்?
3.சிதம்பரத்தில் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள விநாயகரின் பெயர்கள் என்னென்ன?
4.விநாயகரை மருத, அகத்தி, இலந்தை மற்றும் துளசி இலையால் அர்ச்சித்தால் என்ன பலன் கிடைக்கும்?
5.சிந்தாமணி கணபதி - பெயர்க்காரணம் தருக
6.சஷ்டி கணபதி - பெயர்க்காரணம் தருக
7.மியான்மார் நாட்டில் விநாயகர் எப்படி அழைக்கப்படுகிறார்?
8.மங்கோலியா நாட்டில் விநாயகர் எப்படி அழைக்கப்படுகிறார்?
9.கம்போடியா நாட்டில் விநாயகர் எப்படி அழைக்கப்படுகிறார்?
10.சீனா நாட்டில் விநாயகர் எப்படி அழைக்கப்படுகிறார்?
11.ஜப்பான் நாட்டில் விநாயகர் எப்படி அழைக்கப்படுகிறார்?
12. பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகரின் பெயர் என்ன?

விடைகள்:

1. கஜமுகாசுரன்.
2.விநாயகர். ஒளவையார் அவரை தினமும் திருக்கோவலூரில் வழிபட்டு வந்தார்.
3.சிதம்பரம்- கற்பக விநாயகர்.
பாண்டிசேரி- மணக்குள விநாயகர்
4. மருத இலையால் அர்ச்சித்தால் மகப்பேரு எற்படும்
அகத்தி இலையால் அர்ச்சித்தால் துயரம் விலகும்
இலந்தை இலையால் அர்ச்சித்தால் கல்வி மேம்படும்.
துளசி இலையால் அர்ச்சித்தால் நல்வாழ்வு ஏற்படும். ஆனால் அவருக்கு துளசி இலை ஆகாது என்றும் சொல்வார்கள். ஏனென்று விளக்கம் அறிந்தால் சொல்லவும்
5. கபில முனிவருக்கு சிந்தாமணியை திரும்பப் பெற உதவியதால் (விளக்கங்களுக்கு பின்னூட்டப் பகுதியைப் பார்க்கவும் ) இப்பெயர்.
6. கந்த சஷ்டியில் முருகனுக்கு உறுதுணையாய் இருந்ததால் இப்பெயர்.
7. மியான்மாரில் - மஹாபீனி
8.மங்கோலியா - தோத்கார்
9. கம்போடியாவில் - பிராகனேஸ்
10. டூ ஆன்ஷி டியின்
11.வினாயஷா
12.தேசிக விநாயகர் - பிள்ளையார்ப்பட்டியில்.

விநாயகரைப் பற்றி அறிவோமா??

1. விஷ்வக்சேனர் வழிபாடு என்பது யாரைக் குறிக்கும்?
2. விநாயகர் வழிபாட்டுக்கு உகந்த நாள் எது?
3. துர்வாயுக்மம் என்பது எது?
4. விநாயகருக்கு அருகம்புல் போல் அர்ச்சிக்க உதவும் இன்னொறு இலை எது?
5. வாதாபி கணபதிம் பஜே - என்ற பாடலை இயற்றியவர் யார்?
6. விநாயகரைத் துதித்து ஆதிசங்கரர் எழுதிய பாடல் எது?
7. விநாயகர் திருப்பரங்குன்றத்தில் எவ்வாறு காட்சியளிக்கிறார்?
8. திருவாரூரில் அமைந்த விநாயகரின் பெயர் என்ன?
9. திருவெண்ணை நல்லூரில் அமைந்த விநாயகரின் பெயர் என்ன?
10.காஞ்சிபுரத்தில் அமைந்த விநாயகரின் பெயர் என்ன?

விடைகள்

1.விநாயகர்.
2.வெள்ளிக்கிழமை (பொதுவாக). சங்கடஹர சதுர்த்தி எனறும் சொல்லலாம் (மேலும் சதுர்த்தியில் வழிபடுவதால் வரும் நன்மைகளைப் பற்றி அறிய பின்னூட்டப் பகுதியில் ஓம் தத் சத் மற்றும் காரியின் உரையாடலைப் பார்க்கவும்).
3.அருகம்புல்
4.வன்னி இலை
5.முத்துசுவாமி தீக்ஷிதர்
6.கணேச பஞ்ச ரத்தினம்
7.கைகளில் கரும்போடு காட்சி அளிக்கிறார். இன்னொரு கையில் தந்தத்தை பிடித்துக் கொண்டும்
தாமரை மேல் அமர்ந்தும் காட்சி அளிக்கிறார்.
8.திருவாரூரில் - வாதாபி விநாயகர் (மாற்றுரைத்த விநாயகரும் இங்கே உள்ளார். ஆனால் அவரைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லவும்.)
9.திருவெண்ணை நல்லூரில்- பொல்லாப் பிள்ளையார்
10. காஞ்சியில் - விகடச்சக்கர விநாயகர்.

தெரிந்த கேள்விகள் தெரியாத பதிலகள்-12

1.ருது எனறால் என்ன?
2. அயனம் என்பது எத்தனை மாதங்களைக் குறிக்கும்?
3. ஹரித்வார் என்பதன் பொருள் என்ன?
4.ஒரு முகூர்த்தம் என்பது எவ்வள்வு நேரம்?
5.கொடிமரத்தில் எத்தனை கணுக்கள் உண்டு?
6 காஞ்சி எனபதன் பொருள் என்ன?
7. பிறக்க முக்தி தரும் இடம் எது?
8. இறக்க முக்தி தரும் இடம் எது?
9. தரிசிக்க முக்தி தரும் இடம் எது?
10. நினைக்க முக்தி தரும் இடம் எது?

விடைகள் :

1.இரண்டு மாத காலம்
2.ஆறு மாத காலம்
3.அமுதம் சிந்திய இடம்
4.ஒன்றரை மணி நேரம்
5.முப்பத்திமூன்று
6.ஒட்டியாணம்
7.திருவாரூர், ஸ்ரீ சைலம்.
8.காசி
9.சிதம்பரம்
10.திருவண்ணாமலை


1. நமஸ்காரப் பிரியர் யார்?
2. அலங்காரப் பிரியர் யார்?
3. அபிஷேகப் பிரியர் யார்?
4. நைவேத்தியப் பிரியர் யார்?

விடைகள்:

1.சூரிய பகவான்
2.விஷ்ணு பகவான்
3.சிவபெருமான்
4.விநாயகர்

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள்- 10 ஆடல்

கேள்விகளைப் படிக்கும் போது ' நமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை..இவை எல்லாம் நம்மால் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது' என்றே தோன்றும்... சுலபமான விடைகளை அறிந்தவுடன் நீங்களே சந்தோஷப் படுவீர்கள் பாருங்களேன்!!!

விடைகளுக்கு கீழே செல்லவும்

கேள்விகள்:

தாண்டவம்:

1. சிவபெருமான் காளிகா தாண்டவம் ஆடுவது எப்போது?
2. சிவபெருமான் சந்தியா தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
3. சிவபெருமான் சங்கார தாண்டவம் ஆடுவது எப்ப்போது?
4. சிவபெருமான் திரிபுர தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
5. சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
6. சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
7. சிவபெருமான் கௌரி தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
நடனம்:
8. அஜபா நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
9. உன்மத்த நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
10. தரங்க நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
11. குக்குட நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
12. பிருங்க நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
13. கமல நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
14. ஹம்சபாத நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?


பதில்கள்:

சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களைச் செய்யும் போது காளிகா, சந்தியா, சங்கார (சம்ஹார) தாண்டவம் ஆடியதாகக் கூறப்படுகிறது. இத்தாண்டவத்தைப் பற்றிய வரலாற்று கதைகளுக்கு பின்னூட்டப் பகுதியில் "காரியின்" விளக்கத்தைப் பார்க்கவும்.

1. காளிகா தாண்டவம் - படைத்தல் செய்யும் போது.
தலம் - நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி. ஆடிய இடம் - தாமிர சபை (Copper)

2. சந்தியா தாண்டவம் - காத்தல் செய்யும் போது.
தலம்- மீனாட்சி அம்மன் கோவில்,மதுரை. ஆடிய இடம் - வெள்ளி அம்பலம் (Silver)

3. சங்கார தாண்டவம் - அழித்தல் செய்யும் போது.
தலம்- மதுரை என்கிறார்கள் சிலர்.தெரிந்தால் சொல்லவும்.

4. திரிபுர தாண்டவம் - மறைத்தல் செய்யும் போது.
தலம்- குற்றாலநாதர் கோவில், குற்றாலம். ஆடிய் இடம் - சித்திர(Art) சபை.

5. ஊர்த்தவ தாண்டவம் - அருளல் செய்யும் போது.
தலம்- ஊர்த்தவதாண்டவர் கோவில், திருவாலங்காடு, ஆடிய இடம் - இரத்தின(gem) சபை.

6 ஆனந்த தாண்டவம் - இவ்வைந்து செயல்களையும் செய்யும் இடம்.
தலம்- நடராஜர் கோவில், சிதம்பரம். ஆடிய இடம் - கனக (Sky) சபை.

7. கௌரி தாண்டவம் - பார்வதிக்காக ஆடிய போது.
தலம்- திருப்பத்தூர்.

8. அஜபா நடனம்- சிவபெருமான் மேல்மூச்சில், கீழ்மூச்சில் (தவளை போல்) அசைந்தாடிய நடனம். ஆடிய தலம்- திருவாரூர். இது சம்பந்தப்பட்ட மிக சுவாரஸ்யமான கதையைப் பின்னூட்டப் பகுதியில் பார்க்கவும்.

9. சிவபெருமான் பித்தனைப் போல் தலை சுற்றி ஆடிய நடனம் உன்மத்த நடனம் ஆகும். ஆடிய தலம்- திருநள்ளாறு.

10.தரங்க நடனம் என்பது கடல் அலைபோல் அசைந்து ஆடுவது. இதை சிவபெருமான் நாகப்பட்டினத்தில் ஆடினார்.

11. குக்குட நடனம் என்பது கோழி போல் ஆடுவது. ஆடிய தலம் - திருக்காறாயில்.

12. பிருங்க நடனம் என்பது வண்டு மலரைக் குடைவது போல் ஆடுவது. இதை சிவபெருமான் ஆடியது இடம் திருக்கோளிலி ஆகும்.

13. கமல நடனம் என்பது தாமரை காற்றில் அசைவது போல் ஆடுவது. ஆடிய தலம்-திருவாய்மூர்.

14. ஹம்சபாத நடனம் என்பது அன்னம் போல் அடியெடுத்து ஆடுவது. ஆடிய தலம் - திருமறைக்காடு (வேதாரண்யம்)

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள் -9 சக்தியைப் பற்றி

1. சக்திக்கு துர்கா என்ற பெயர் எப்படி வந்தது? அதன் பொருள் என்ன?
2. காசி விசுவநாதர் இருக்கும் இடத்தில் சக்தியின் பெயர் என்ன?
3.தடாசதகைபிராட்டி என்ற பெயரை சக்தி எப்போது பெற்றாள்?
4. துர்க்கையை இராகு காலத்தில் வழிபடும் போது ஒவ்வொரு நாளில் எவ்வித மலர்களால் வழிபட வேண்டும்?
5. துர்க்கை தோன்றிய நாள் எது?
6. அர்ச்சகர்கள் பெண் வேடமணிந்து சக்தியை பூசை செய்யும் தலம் எது?
7. வெக்காளியம்மன் திருக்கோவில் எங்கு உள்ளது?
8. வக்கிரகாளியும் வரதராஜ பெருமாளூம் உறையும் இடம் எது?
9. மங்கள சண்டி - பெயர்க்காரணம் என்ன?
10. துர்க்கைக்கு எந்த எண்ணைகளில் தீபம் ஏற்றுவது நல்லது?

பதில்கள் இங்கே:

1. துர்கமன் என்ற அசுரனைக் கொன்றதால் துர்கா என்ற பெயர் பெற்றாள் சக்தி. துர்கை என்றால் தீயவற்றை அழிப்பவள் என்று பொருள்.
2. காசி விசாலாக்ஷி
3.மதுரையில் மீனாட்சி அவதாரத்தில் சிவபெருமான் சௌந்தரபாண்டியனாய் உருவெடுத்து வந்த போது!!
4. செவ்வாய்
5.விரைவில் பதிவு செய்யப்படும்...
6.திருவானைக்காவல்
7.உரையூர்
8.திருவக்கரை பெரும்பாக்கத்தின் தெற்கே 7 கி.மீ அல்லது திருகானூர் வடக்கே 5 கீ.மி தொலைவில் உள்ளது. விஷ்ணு வக்ராசுரனை வதம் செய்ததாலும், பார்வதி தேவி வக்ராசுரனுடைய சகோதரியான துன்முகியைக் கொன்று அவளுடைய வயிற்றில் இருந்த சிசுவை குண்டலமாகக் கொண்டு வக்ரமாக இருந்ததால் வக்கிரகாளி என்ற பெயர் பெற்றாள்.
9. மங்கள சண்டீ- மங்கள் எனபது செவ்வாய் பகவானைக் குறிக்கும். அவர் வழிபட்டதால் மங்கள சண்டீ எனறு பெயர்.
10. வேப்பெண்ணை, இலுப்பை எண்ணை, நல்லெண்ணை, தேங்காயெண்ணை.

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள்- 8 பெருமாளைப் பற்றி

பெருமாளைப் பற்றி சில கேள்விகள் :

1. கமலஷேத்திரம் என்பது எது? அதன் சிறப்பு என்ன?

2. விஷ்ணு சுயமாகக் குடிகொண்ட தலங்கள் எத்தனை? அவை யாவை?

3. அப்பக்குடத்தான் எனற பெயருடன் விஷ்ணு காட்சியளிக்கும் இடம் எது?

4. விஷ்ணு ஜோதி வடிவமாகக் காட்சியளித்தது எங்கே?

5. விஷ்ணு ப்ரலகாசூரனை வதம் செய்தது எங்கே?

இன்னொரு சுலபமான கேள்வி..choice (5/6) வேற இருக்கு பாருங்க?:)-

6 விஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்கள் யாவை?

பதில்கள்

1. கமலக்ஷேத்திரம் என்பது திருக்கண்டியூரைக் குறிக்கும். ஹரசாபவிமோசனப் பெருமாள் - சிவனின் சாபத்தைப் (ப்ரம்மஹத்தி தோஷம்) போக்கிய தலம்.
கமலவல்லி நாச்சியார் உள்ள இத்தலத்தில் கமலாக்ருதி விமானம் (தாமரை அமைப்பு) உள்ளது. இது ஸ்ரீ ரங்கத்தைவிட பழமை வாய்ந்த திருப்பதி ஆகும்.

2.விஷ்ணு சுயமாகக் குடிகொண்ட தலங்கள் எட்டு. அவை
தலம் பெருமாள்
1. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ ரங்கநாதர்
2. ஸ்ரீ முஷ்னம் பூவராகர்
3. திருப்பதி ஸ்ரீ நிவாசர்
4. நைமிசாரண்யம் ஸ்ரீ ஹரி
5. புஷ்கரம் பரமபுருஷன்
6. சாளிக்ராமம் ஸ்ரீ மூர்த்தி
7. பத்ரிகாஸ்ரமம் பத்ரிநாராயணன்
8. வானமாமலை தோதாத்ரிநாதர்


3. அப்பக்குடத்தான் என்ற பெயரில் கோவிலடி (திருவையாறு அருகே) என்ற ஊரில் உள்ளார்

4. விஷ்ணு ஜோதி வடிவமாகக் காட்சியளித்த இடம் காஞ்சிபுரம் ஆகும்.

5 விஷ்ணு ப்ரலகாசூரனை பரிக்கல் என்ற இடத்தில் வதம் செய்தார்.

5. பஞ்ச ஆயுதங்கள் - சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம், கட்கம்


தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள்- 7

1. நவராத்தி வழிபாட்டை கிருத யுகத்தில் அறிந்தவர் யார்? யார் அவருக்கு அதைச் சொன்னார்?

2. நெய்யில் உறைந்திருப்பவர் யார்?

3. திருவெள்ளறை - இத்தலம் எங்கு உள்ளது? என்ன ஆலயம் இங்கு உள்ளது?
யார் அதனை நிர்மாணித்தார்?

4. இந்திரனுக்கு அகலிகையால் ஏற்பட்ட சாபம் நீங்கிய இடம் எது?

5. புரந்தரன் என்பது யாரைக் குறிக்கும்?


பதில்கள்

1. சுகேதன் என்ற அரசனுக்கு ஆங்கீரஸர் முனிவர் கூறியது.

2.சூரிய பகவான்

3. பங்கஜவல்லி சமேத புண்டரீகாஷப் பெருமாள் கோவில் உள்ள திருவெள்ளரை திருச்சி மாவட்டத்தில் உள்ளது.

4. திருக்கண்ணனார் கோவில்

5. இந்திரன்

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள்- 6


1. சிவகாமசுந்தரி - எனக்கு மிகவும் பிடித்த பெயர்..கூப்பிடும் போதே அவ்வள்வு நளினம்!!!. சரி! இந்த பெயரில் சக்தி காட்சி தரும் இடம் எது?
2. எமதர்மன் கோவில் எஙகு உள்ளது?
3. அன்பில் - கோவில் மூலவர் யார்/
4. ராகு காலத்தில் யாரை வழிபட வேண்டும்?
5. பசும்பாலில் வசிப்பவர் யார்?

1. சிதம்பரம்
2. ஸ்ரீ வாஞ்சியம்
3. வடிவழகிய நம்பி
4. துர்கை
5. சந்திரன்

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள் - 5

1. முதலாழ்வார் மூவரில் இரண்டாவது ஆழ்வார் யார்?

2. ருத்திராட்சத்தில் எத்தனை முகங்கள் உண்டு? கை மணிக்கட்டில் மற்றும் மார்பில் எத்தனை ருத்திரட்சம் தரிக்கலாம் என்று சாத்திரம் சொல்கிறது?

3. எந்த இரண்டு நதிகள் தேவப்ப்ரயாக் என்ற ஊரில் சேர்ந்து கங்கையாக வருகிற்து?

4. விஷ்ணுவின் செவி துவாரங்களிலிருந்து தோன்றிய அசுரர்கள் யார்?

5. நவராத்தியின் போது சகதி வதைத்த மூன்று அசுரர்கள் யார்?

பதில்கள் :

1. பூதத்தாழ்வார்
2. ஒன்று முதல் பதினாலு வரை. கை மணிக்கட்டில்- 12. மார்பில்- 108.
3. அலக்நந்தா, பாகீரதி
4. மது, கைடபர்
5. சும்பன், நிசும்பன், மஹிஷாசுரன்

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள் -4

1. யாகங்களில் சிறந்தது எது?
2. விரதங்களில் சிறந்தது எது என்று கருதப்படுகிறது?
3. கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் உள்ள சக்தியுள்ள கோவில் எது?
4. துன்பங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
5. முருகப் பெருமானைப் ப்ற்றி கூறும் ஆகமம் எது?

பதில்கள்:

1. அஸ்வமேத யாகம்

2.ஏகாதசி விரதம் (வைணவம்) ; சோமவார விரதம் (சைவம்)

3. வைஷ்ணவி ஆலயம் என்று படித்தேன். 'கூகிலில்' தேடினால் அப்படியொரு கோவிலைக் கண்டறிய முடியவில்லை. ஆனால் அதே ஊரில் துர்கை ஆலயம் சக்தி வாய்ந்த ஒன்று எனக் கண்டறிந்தேன். அவை இரண்டும் ஒன்றாக இருக்கக் கூடும் என நம்புகிறேன்.

4. துன்பங்கள் மூன்று வகைப்படும். அவை

1.ஆதியாத்மிகம் : நமது செயலால் நாமே எற்படுத்திக் கொள்ளும் துன்பங்கள்.
2.ஆதிதைவிகம் : முன்வினையால் எற்படும் துன்பங்கள்.
3.ஆதிபௌதிகம் : இயற்கை காரணமாக நம்மையும் மீறி வரும் துன்பங்கள்.

4. முருகப் பெருமானைப் பற்றி கூறுவது காமிகம் என்ற ஆகமம் ஆகும். அதனை தமிழில் 'குமார தந்த்ரம்' என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளார் விஸ்வநாத சிவாசாரியார் அவர்கள்.

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள் - 2 குபேரன் பற்றி

1. குபேரன் தோன்றிய நாள், நட்சத்திரம் எது?
2. குபேரனுக்கு உகந்த நைவேத்தியம் எது?
3. குபேர விக்ரஹம் உள்ள் புகழ் பெற்ற இடம் எது?
4. திருமங்கலத்தின் சிறப்பு என்ன?
5. குபேரனுக்கு தனிக்கோவில் உள்ளதா?


பதில்கள்

1. குபேரன் தோன்றிய நாள் - வியாழக்கிழமை, நட்சத்திரம் - பூசம்.
2. குபேரனுக்கு உகந்த நைவேத்தியம் : ஏலக்காய், கிராம்பு போனற வாசனை திரவியங்கள் கலந்த பால்.
வெல்லம்/சர்க்கரை போன்றவையும் லக்ஷ்மி குபேர பூஜையில் வைக்கப்படுவதாக so-hum பின்னூட்டப் பகுதியில் சொல்கிறார்.
3. நாசிக் (இந்தியாவில் பணம் அச்சடிக்கும் இடம்).

4. தமிழகத்தில் திருமங்கலத்தில் (மதுரை) தான் முனீஸ்வரர் கோவிலில் குபேர விக்ரஹம் தனியாக உள்ளது.

5. குபேரனுக்காக பொதுவாக தனிக்கோவில் கிடையாது. சிவன் கோவில்களில் அவருடைய சிலையைக் காணலாம். ரத்னமங்கலத்தில் (க்ரசண்ட் கல்லூரி அருகில்) புதிதாக இப்போது குபேரர் கொவில் வந்துள்ளதாம். மேலும் விபரங்களுக்கு பின்னூட்டப் பகுதியைப் பார்க்கவும்.

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள் - 2

1. ஸ்ரீ ராமானுஜருக்கு எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்தது யார்?
2. கொடுங்கல்லூரில் கொவில் கொண்ட இறைவி யார்?
3. காரைக்கால் அம்மை அருளிய நூல்கள் யாவை?
4. குரங்கணி எங்கு உள்ளது? அதன் சிறப்பு என்ன?
5. கோவில் கர்பகிரகத்தின் தெற்கு வடக்கு மேற்கு திசையில் இருக்க வேண்டிய தெய்வங்கள் எவை?
6. அர்த்த மண்டபத்தின தெற்கு வடக்கு திசையில் இருக்க வேண்டிய தெய்வங்கள் எவை?
7. மூன்று தலை வீரபத்திரர் - சிலை எங்கு உள்ளது?
8. மிருதங்க தக்ஷிணாமூர்த்தி - சிலை எங்கு உள்ளது?
9. சென்னை கோயம்பேட்டில் உள்ள தொன்மையாக கோவில் எது?
10.சங்கம், பதுமம் என்றால் என்ன??

பதில்கள்

1. ஸ்ரீ ராமானுஜருக்கு எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்தது திருகோஷ்டியூர் நம்பிகள். மேலும் விபரங்களுக்கு பின்னூட்டப் பகுதியைப் பார்க்கவும்.

2. கொடுங்கல்லூரில் கொவில் கொண்ட இறைவி ஸ்ரீ பகவதியம்மன். கேரளாவில் உள்ள இந்த கோவிலில் மஹாமேரு சக்கரத்தை ஆதிசங்கரர் நிறுவி, வழிபாட்டைத் தொடக்கி வைத்தார். இந்த பகவதி அம்மன் கண்ணகி என்று கூற்ப்படுகிறது. இங்கு மாசிமாதம் பரணித் திருவிழா கொண்டாடப்படுகிறது.

3. காரைக்கால் அம்மை அருளிய நூல்கள் : அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை

4. குரங்கணி: இவ்வூர் திருச்ச்செந்தூர் அருகே உள்ளது. இங்கிருந்து வானரப்படை சென்று ராமருக்கு உதவியதால் இப்பெயர் வந்தது. இங்கு அமைந்துள்ள தேவியின் பெயர் முத்துமாலை அம்மன். இராவணன் சீதையை அபகரித்து சென்ற போது அவள் விட்டெறிந்த முத்து மாலையே இங்கு தேவியானது.

5. சைவக் கோவில் கர்பகிரகத்தின்

தெற்கில் - தக்ஷிணாமூர்த்தி
வடக்கில் - லிங்கோத்பவர்
மேற்கில் - ப்ரம்மா

6. அர்த்த மண்டபத்தின

தெற்கில் - விநாயகர்
வடக்கில் - துர்க்கை

7. மூன்று தலை வீரபத்திரர் சிலை தாராசுரம் என்ற ஊரில் உள்ளது.

8. மிருதங்க தக்ஷிணாமூர்த்தி சிலை கழுகுமலை என்ற ஊரில் உள்ளது.

9. சென்னை கோயம்பேட்டில் உள்ள தொன்மையாக கோவில் குசலபுரீஸ்வரர் கொவிலாம்.

10. சங்கம், பதுமம் என்பது மிகப்பெரிய எண்களைக் குறிக்கும். சங்கம் என்பது நூறு கோடான கோடி. மகாசங்கம் என்பது ஆயிரம் கோடான கோடி.
பதுமம் என்பது கோடான கோடி. மகாபதுமம் என்பது பத்து கோடான கோடி.
சங்கநிதி, பதுமநிதி என்பது குபேரனின் இருபுறமும் உள்ளவை. இது குபேரன் பலப்பல கோடிகளுக்கு அதிபதி என்பதைக் குறிக்கும்.

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள்

தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள் -1

1. ஸ்ரீ சாரதாம்பாள் பீடத்தை நிறுவியவர் யார் ?

2. கொனார்க் கோவிலைக் கட்டியவர் யார்?

3. பார்வதி தேவி காளத்தி மலையில் எந்த பெயரில் தவம் செய்தார்?

4. தஞ்சையில் உள்ள வெண்ணி என்ற ஊரில் சிவனின் பெயர் என்ன?

5. சிரவணம் என்பது என்ன??


பதில்கள்

1: ஆதிசங்கரர்
2. கங்கை வம்சத்தில் வந்த மன்னர் ராஜா நரசிம்ம தேவர் (வரலாறு) ( சாம்பா
-வின் கதைக்கு பின்னுட்டப் பகுதிக்கு செல்க )
3. பால ஞான பூங்கோதை
4. கரும்பேஸ்வரர் ( அம்பாள்- அழகிய நாயகி)
5. இறைவனின் புகழை கேட்டு இன்புறுதலே சிரவணம் ஆகும்

இறைவனை வழிபடுவதை ஒன்பது வ்கையாக சான்றோர் பிரிப்பர்.. அவையாவன:

1. Sravanam Hearing Parikshit
2. Nama Sankeerthanam Chanting Narada
3. Smaranam Remembering Sukhabrahmam
4. Paada Sevanam Serving at the Feet Lakshmana
5. Archanam Offering Ambarisha Rukmangada
6. Daasyam Service Hanuman , Garuda
7. Sakhyam Friendship Arjuna, Sugiriva,Vibishana
8. Vandanam Obeisance Akrura, Uddhava
9. Aatma nivedanam Self Sacrifice மகாபலி

எழுதியவர் : செல்வமணி - இணையம் - aanmikambspot (4-Oct-15, 10:34 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 1356

மேலே