இக்கரையும் பச்சை

இக்கரைக்கு
அக்கரை பச்சை..
இங்கே,
அக்கறை போனதால்,
அக்கரை மட்டுமே
பச்சை,
இக்கரை எல்லாம்
வெறும் எச்சை.
எக்கரை நோக்கினும்
ஒரு கூட்டம்,
பொதுக்கூட்டம்,
மதுக்கூட்டம்,
ஆட்சி பிடிக்க
அரசியல் கூட்டம்,
ஆண்டவனை பிடிக்க
ஆன்மீக கூட்டம்,
கஷ்டம் பாடும்
ஒரு கூட்டம்,
நஷ்டம் பாடும்
ஒரு கூட்டம்,
கரை சேர
ஒரு கூட்டம்,
கால் வார
ஒரு கூட்டம்,
இடையில்,
கார்ப்பரேட்டுகளின்
ஆட்டம்,
கம்யுனிசத்தின்
போராட்டம்..

இந்நிலை மாற,
புதியதோர் உலகு செய்வோம்,
புவியினில் எவரும் சமம்
என கொள்வோம்,
உழவன் கையில்
உலகை கொடுப்போம்,
உலகம் உரைக்க
உரக்க சொல்வோம்
இக்கரையும் பச்சை என்று..

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (5-Oct-15, 1:53 pm)
பார்வை : 58

மேலே