ஆணின் தாய்மை

தேடும் விழிகள்
நாடும் தருணம்
காதல் கருத்தரிக்கும்..

வரையறுக்க பொழுதில்லை
ஆகலாம்
மாதங்கள்
வருடங்கள் - கருவுக்கு

கூடி பெருக தேவையில்லை
கண்கள் கூடு பெயரும்
பொழுதே எல்லை - கருவுக்கு

வேண்டுவன செய்தல்
வேண்டுமிடம் செல்தல்
அவ்வப்போது சந்திப்பு
ஆரோக்கியம் - கருவுக்கு

அவள் சம்மதம்
அவர்கள் சம்மதம்
எல்லாம் அமைந்தால்
என் கரு பிழைக்கும்
என் குழந்தை பிறக்கும்
திருமணம் என்னும் பெயரோடு..

எவரேனும் மறுத்தால்
எவருக்காகவும் அவள் மறுத்தால்
என் காதல் சிதையும்
கருவாகவே..

ஆணும் கருத்தரிக்கும்
அதிசயம் - காதல்..

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (5-Oct-15, 2:04 pm)
Tanglish : aanin thaimai
பார்வை : 214

மேலே