இன்னுமா தெரியவில்லை.....,


ஏரிக்கரையில் கொக்காக
இலவசத்துக்கு ஏங்கும்
இனங்கள்!

சாலையோர மரங்களாக
பிராணனைக் கொடுத்து
ரேஷன் கடையில்
வரிசையாய்....,

பாலுக்கழும் குழந்தைகளாய்
குடிநீருக்கழும்
கூட்டங்கள்!

பாதையோர சரித்திரத்தின்
பாதிநேரக் கதாப்பாத்திரங்கள்!

எக்ஸ் கதிர் இல்லாமலேயே
எடுக்கப்பட்ட
உயிர்க்கூடுகள்....,

இன்னுமா தெரியவில்லை
நாங்கள்தாம்
ஏழைகள்!

எழுதியவர் : வெ.பசுபதி ரெங்கன் (1-Jun-11, 2:51 pm)
சேர்த்தது : vpasupathi rengan
பார்வை : 371

மேலே