தேடல்
குழந்தையின் அழுகை தேடல்
அம்மாவின் அன்பில் முடியும்
தாகத்தின் தேடல்
தண்ணீர் குடித்தால் முடியும்
கவிஞனின் தேடல்
கவிதையில் முடியும்
மோகத்தின் தேடல்
முத்த சத்தத்தில் முடியும்
என் தனிமையின் தேடல்
நீ வந்தால் முடியும்
என் காதலின் தேடல்
என் காலம் முடித்தாலும் முடியாது