உன்னால் தான் அழகு
ஒற்றை நிலாவை ஓர் கல் ஏறிந்து நீ விரட்ட
ஓராயிரம் நட்சத்திரம் அதற்கு துணையாய் வருதே
வானமே உன்னால் அழகு
மழையில் நீ நனைய உன்மேல் படாத நீர்
மீண்டும் ஆவியாகி வானத்தில் மேக கூட்டமாய் உன் பட காத்திருக்கிறதே
வான் மழை மேகமும் உன்னால் அழகு
உன் காலில் பட பலமுறை முயன்றும் முடியாமல்
மணலை தொட்டு மனம் உடைத்து போகுதே அலை
அதுவும் உன்னால் அழகு
நீ தூக்கத்தில் புலம்பும் சப்தம் கூட சப்தஸ்வரத்தில் நித்தம் சேருதே
அந்த சப்தஸ்வரமும் உன்னால் அழகு
நீ தூங்கும் நேரத்தில் கொசு கூட உன்னை கடிக்காமல்
உன் செவி அருகே ரீங்காரம் என்னும் தாலாட்டு பாடுதே
அந்த ரீங்காரமும் உன்னால் அழகு
கடற்கரையில் உந்தன் காலடி படாமல் இருக்க
உந்தன் காலை தொடுவதே என்ற ஒரே லட்சியத்தில் பத்துமடங்கு பெரிதாகி ஊருக்குள் உன்னை தேடி வருதே சுனாமி
சுனாமியும் உன்னால் அழகு