அனுபவம் எழுதும்

படிப்பு புத்தக அனுபவம்
கசப்பு வாழ்க்கை அனுபவம்

கனவு இரவுத் துயிலின் அனுபவம்
நிஜம் விழிக்கும் பகலின் அனுபவம்

காதல் மனதின் மாலை அனுபவம்
காமம் உடலின் இரவு அனுபவம்

பொய் கவிதையின் இனிய அனுபவம்
சத்தியம் நாம் பழக வேண்டிய அனுபவம்

ஜனனம் அழுகையின் ஆரம்ப அனுபவம்
மரணம் சொல்லாமல் வரும் கடைசி அனுபவம்

வாழ்க்கை கனவுகள் எழுதும் புத்தகம்
நிஜங்கள் எழுதும் சுய சரிதை

அனுபவங்களின் தொடர்ச்சியே வாழ்க்கை
இனித்தால் மகிழ்ச்சி கசந்தால் கண்ணீர்

இந்த அனுபவங்களின் சுழற்சியே
உன் ஆத்ம கதை !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Oct-15, 8:25 am)
Tanglish : anupavam
பார்வை : 712

மேலே