கதை சொல்லுறோம் வாங்க

நாலு முழம் வேஸ்ட்டி கட்டி
அத சுத்தி தட்டி கட்டி
மூங்கில் கம்புல அட்ட ஒட்டி
கலர் கலரா வர்ணம் பூசி
திரை பின்னாடி வெளூச்சம் காட்டி
கலர் பொம்மையை காத்தூல ஆட விட்டு
தாரை தப்பட்டை அடுச்சு
கதை சொல்லி படம் காட்டினான் என் முப்பாட்டன்....

படிக்க தெரியாத பாமரனும் வாய் புலந்து உக்காந்திருக்க
ராமாயணமும் மகாபாரதமும் கண் முன்னே ஓட விட்டு
ராத்திரி முழுக்க உறங்காது கூத்து காட்டினான்...

வானம் பார்த்த கரிசல் பூமியும்
வாய் பிளந்த வறட்சி பூமியும்
மழை வந்து குளிர்ச்சியாக
பத்து நாள் முழுச்சு இருந்து
ராமாயண கூத்து கட்டுவான்..

கூத்த தாய் வழிய கொண்டு பிறந்த
கலை தான் திரையரங்கம்...

பெத்த பிள்ளையே தாயை கொல்வது போல
மெது மெதுவா கூத்து கலைக்கு சமாதி கட்டியது திரையரங்கம்...

கூத்து ஆடியவனும் கூத்தும் இந்த மண்ணை விட்டு அழிந்தாலும்
அவன் அடித்த தாரை ஒலியும் பாடிய பாட்டின் சுதியும்
இன்னும் வாழுகிறது ஏடுகளாக...

இன்று ஏடுகளில் மட்டும் புதைந்து கிடக்கும் கூத்தின் பெருமையை
அடுத்த தலைமுறையின் கண் முன்னே கொண்டு வர எண்ணான் முடிந்த முதல் அடி...

எழுதியவர் : பிரதீப் ரா (8-Oct-15, 10:41 am)
பார்வை : 90

மேலே