நான் மூடன்

​பிறந்த நாள் முதல் இன்று வரை
வாழ்கிறேன் ஐந்து அறிவு மூடனாக...

அரசு ஊழியன் தன் கடமையை செய்ய
பணம் கேட்ட போது
கோவம் கொண்டேன் மூடனாக...

ஆரம்ப பள்ளி படிக்கும் குழந்தையின்
வருடாந்திர கட்டணம் கண்டு
கோவம் கொண்டேன் மூடனாக...

பெற்றவளே காண உரிமை இல்லாத தேகத்தை
கண்ணாடி இழை போன்ற துணி அணிந்து காசில்லா விளம்பரம் செய்யும்
பெண்களை கண்டு கோவம் கொண்டேன் மூடனாக...

தன்னிகர் இல்லாத தமிழாக்கம், தண்ணி இல்லாத நாடக மாறும் நிலமையிலும்
பத்து அதுக்கு மாடி கட்டி பத்தாவது மாடி மீது
குளியல் குலம் வெட்டும் வள்ளள்களை கண்டு
கோவம் கொண்டேன் மூடனாக...

கை இரண்டில் குறை இல்லை
கால் இரண்டில் குறை இல்லை
கண் இரண்டில் ஒன்று இல்லை
என்று ஊனத்தை காட்டி பிச்சை எடுக்கும்
கடும் உழைப்பாளிகளை கண்டு
கோவம் கொண்டேன் மூடனாக...

இருபத்தி இரண்டு வருடம் பாடு பட்டு வளர்த்த
மகளை தாரை வார்த்து தரும் போதும்
வரதச்சனை எனும் பெயரில் வியாபாரம் பேசும்
வியாபாரிகளை கண்டு கோவம் கொண்டேன் மூடனாக...

தான் கட்டிய வீட்டில் பெத்தவளை வாழ வைக்காமல்
முதியோர் இல்லம் கண்டு வசதியாக ஒரு படுக்கையை
அமைத்து தரும் பாசமுள்ள பிள்ளைகளை கண்டு
கோவம் கொண்டேன் மூடனாக...

ஆறு அறிவு இருந்தும் இந்த செயலுக்கு எல்லாம்
பச்சைகொடி காட்டும் மனிதனாக இருப்பதை விட...
ஐந்து அறிவு கொண்டு இந்த செயலுக்கு எல்லாம்
கோவப்படும் மூடனாக வாழ்வதை பெருமையாக
நினைக்கும் நவீன உலக மூடன் நான்.....

எழுதியவர் : பிரதீப் ரா (8-Oct-15, 10:52 am)
Tanglish : naan muudan
பார்வை : 194

மேலே