நான் அழுதால்

குழந்தை அழுதால் பசி
குயில் அழுதால் தேடல்
குடல் அழுதால் பட்டினி
உடல் அழுதால் நோய்

விதை அழுதால் விரயம்
வீரம் அழுதால் தோல்வி
மானம் அழுதால் இழப்பு
தானம் அழுதால் வறுமை

மனம் அழுதால் மன்னிப்பு
சினம் அழுதால் சீர்திருத்தம்
நீ அழுதால் அது நட்பு
'நான்'(ஆணவம் ) அழுதால்
"ஞானம்"

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (8-Oct-15, 7:37 pm)
Tanglish : naan azuthaal
பார்வை : 80

மேலே