தத்துவ கவிதை

அரைகுறை வெற்றியை விட ..
முழுமையான தோல்வி ..
வாழ்க்கையில் எவ்வளவோ ..
மேல் ....!!!

அரைகுறை வெற்றி
காற்றில் அலைந்து திரியும்
பஞ்சைப்போன்றது..
கீழேயும் விழாது மேலேயும் ..
செல்லாது ...!!!

நிறைய வாழ்க்கையில் ..
அரைகுறை வெற்றியால் ..
முழுவெற்றியை இழக்கிறோம் ...
நிறைய மனிதர்கள் அரைகுறை ..
வெற்றியை முழுவெற்றியாக ..
கருதியே சாதனையை
இழக்கிறார்கள் ...!!!

கே இனியவன் தத்துவ கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (8-Oct-15, 8:05 pm)
Tanglish : thathuva kavithai
பார்வை : 201

மேலே