ஊமை மூங்கிலில் ஓர் புல்லாங்குழல் 555

என்னவளே...
ஓங்கிவளர்ந்த மூங்கில்காடு
அதில் ஊமை மூங்கில் நான்...
ஓசை செய்ய ஆசைப்பட்டேன்
என்னை புல்லாங்குழலாக்கியவள் நீ...
கன்னி உன் கண்களில் மைஎடுத்து
கவிதை எழுத ஆசைபட்டேன்...
என்னை
காதல்கொள்ளவில்லை என்றாய்...
வயலில் பயிராக வளர்ந்துவிட
ஆசைப்பட்டேன்...
என்னை விதையாகதூவ
உனக்கு மனமில்லை...
உன்வீட்டு வாசலில் தினம்
காத்திருக்க ஆசைப்பட்டேன்...
நீ மாகோலம் போடுவதற்கு
வருவதில்லை...
இதோ என் ஆசைகளை
இன்றுநான் துறந்துவிட்டேன்...
செல்கிறேன் முற்றும்துறந்து...
மறக்காமல் வந்துவிட்டாய்
என்னை வழியனுப்ப...
இப்போது மட்டும்
ஏனடி வந்தாய்...
புல்லாங்குழலும் நீதான்
அதை புழுதில் எறிந்தவளும் நீதான்.....