கிராமத்து நிஜங்கள்
கிராமத்து நிஜங்கள்
**********************************************
கானம் இடும் குயில் நிறைந்த பச்சை பசுஞ் சோலைகள்
சாணம் அதில் மொழுகியிட்ட தாழ் கூரை இல்லங்கள்
இனத்தோடு நல்செர்ந்து வயல் மேயும் கால் நடைகள்
உணவுக்காய் நிலம் ஓர்ந்து ஏர் பிடிக்கும் உழவர்கள்
ஓணான்கள் கொடியேறி இரைபிடிக்கும் காட்சிகள்
ஏணியின்றி மரமேறி "மா " பறிக்கும் சிறுவர்கள்
எண்ணைக்காய் செக்கிலிட காயவைத்த வித்துக்கள்
கனவான்கள் அமர்ந்திருந்து நீதியிடும் ஆயங்கள்
கனி இடா ஆல் நிழலில் ஆடு புலி ஆட்டங்கள்
துணியின்றி மூக்கொழுக ஓடியாடும் குழந்தைகள்
நாணமுடன் தலை குனிந்து நடை பயிலும் பெதும்பைகள்
நாண் இல்லா பார்வைக்கணை வீசி நிற்கும் காதலர்கள்
கோணாத வகிடெடுத்து தலை முடிக்கும் கோதைகள்
மானாட்டம் மயிலாட்டம் நிகழ்ச்சிக்கு பெருந்திடல்கள்
தானமிடும் பெருசுகள் மானமுள்ள மனிதர்கள்
ஊனமிலா உள்ளங்கள் வாழுகின்ற பாசறைகள் !
கிராமத்து நிஜங்களே
*********************************