மன்மோகன்

என்னடா உம் பையனுக்கு மன்மோகன்-ன்னு பேரு வச்சிருக்க.முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மேலே உனக்கு அளவு கடந்த பாசமா?

அது உண்ம தான். எம் பையன் பொறந்த ஒடனே பேரு வச்சு அந்தப் பேர பதிவு செய்யணும். யார் யாரோ பையனுக்கு பல தமிழ்ப் பேருங்களச் சொன்னாங்க. 98% தமிழர்கள் அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேரா வச்சிருக்கும் போது எம் பிள்ளைக்குத் தமிழ்ப் பேர வச்சா நம்ம சமுதாயம் என்னப் பத்தி என்ன நெனைக்கும்? எம் பையனுக்கு ஒரு இந்திப் பேர வைக்கலாம்னு நெனச்சபோது டாக்டர் மன்மோகன் சிங் பேரு தாம் அந்த நேரத்திலெ ஞாபகத்துக்கு வந்திச்சு. அந்தப் பேரையே எம் பையனுக்கு வச்சிட்டேன்.

சரி அந்தப் பேருக்கு அர்த்தம் உனக்குத் தெரியுமா?

அர்த்தத்தைப்பத்தியெல்லாம் யாருடா கவலப்படறாங்க?


####€€
மன்மோகன்=உவகையளிக்கிற, மகிழ்ச்சியளிக்கிற, களிப்பூட்டுகிற
Manmohan = pleasing, one who wins over the heart
இதயத்தை வெல்கின்ற

*******
சிரிக்க அல்ல.சிந்திக்க.மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.

எழுதியவர் : மலர் (9-Oct-15, 2:41 pm)
பார்வை : 91

சிறந்த நகைச்சுவைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே