மோகன புன்னகை 4
வீடு வந்து சேர்ந்ததும் மீராவுக்கு அவன் நினைப்பு ஒட்டிக்கொண்டு விட்டது. அதனை பெரிய அழகன் என்றெலாம் சொல்லி விடமுடியாது என்றாலும் அவன் பேரழகனவே தோன்றி இருந்தான் மீராவிற்கு....
நாட்களும் ஓடிக்கொண்டு தான் இருந்தன... என்றும் அவனை பார்ப்பதும் அவன் புன்னகை கண்டு மயங்குவதும் மீண்டும் அதற்காகவே காத்திருப்பதும் அவளுக்கு பிடித்து போயிருந்தது. அவள் அவனை யாரும் அறியாமல் நோக்குவதை ஊரே அறிந்திருந்தது. இப்படி நாட்கள் நகர கிருஷ்ணாவுக்கு முதல் செமஸ்டர் தேர்வு முடிந்து விடுமுறையில் இருந்தான்... சில நாட்கள் ஆகவே அவனை காணததில் மீரா சற்று சோகம் அடைந்து இருந்தாள். அவனை பார்பதர்க்காகவே உட்காரும் ஜன்னல் ஓர சீட்டை விட்டு வேறு சீட் இல் அமர்திருந்தால்... அவன் பஸ் ஸ்டாப் இல் இலாதது கண்டு ஏதோ மனதில் இலாதது போன்று உணர்வில் வெளியில் நோக்கினால் எதிரில் அவன் அந்த சைக்கிள் இல் மெதுவா நகர்ந்து கொண்டிருந்தான். பேருந்து நகர அவன் கண்கள் யாரயோ தேடுவது அவளுக்கு புரிந்தது.
ஒருவேளை கிருஷ்ணா என்னை தான் தேடுகிறானோ... கை காட்டலாமா.. இல்லை இல்லை வேண்டாம் என்று எண்ணியவள் மகிழ்ச்சியில் மனம் திளைக்க கண்மூடினாள்.
மீராவிற்கு அந்த சந்தேகம் நேரம் ஆக ஆக அவன் தன்னை தேடி தான் வந்திருபனோ என்று என்ன தூண்டியது. நாளைக்கும் வேறு சீட் இல் அமர்ந்து பார்க்கலாம் அவன் வருகிறான இல்லையா என்று.
அடுத்த நாள் மறுபடியும் வேறு சீட்டில் அமர்ந்தாள்... பேருந்து அவன் நிறுத்தம் நின்று ஆட்களை ஏற்றி கொண்டு நகர தொடங்கியது... அதோ அவன்... கிருஷ்ணா.... எதிரில் கண்கள் எதையோ தேடுகிறது என காட்டிகொடுத்து.
சட்டென அவன் கண்டுவிட்டான் அவளை.... மீரா தன்னை அறியாமல் ரசித்து கொண்டிருந்ததை...
அந்த புன்னகை அதை உறுதி படுத்தியது.... அதே மோகன புன்னகை...