சாபம்
யார் விட்ட சாபம் இது !!
யார் செய்த பாவம் இது !!
தனியாக தவிக்கிறோம்
வலியாலே துடிக்கிறோம்!!
உயிர் வாழ நினைக்கிறோம்
உரிமையை நாங்கள் கேட்கிறோம் !!
ஒரு வேலை உணவின்றி
உயிர் வாழ கடல் தாண்டி கரையேறினோம் !!
யுத்தத்தில் தலைவனை இழந்தோம்
ரத்தத்தில் நாங்கள் மிதந்தோம் !!
உலகமே அழுது பயன் என்ன
ஒரு லட்சம் உயிர்க்கு பதிலென்ன!!
ஆபத்தில் நாங்கள் துடித்தோம்
அந்த ஆண்டவனை கூட வெறுத்தோம் !!
மானத்தை கெடுத்து அழித்தார்கள்
மண்ணோடு மண்ணாக புதைத்தார்கள் !!
அகதியா எம்மை அழைத்தார்கள்
அன்று மௌனமா ஏனோ பார்த்தார்கள் !!
தனித்தமிழ் தான் என்கள் நாடு
அதுவே இப்போ ஆனது சுடுகாடு!!
இறைவனே!! இறைவனே!!
எம் நிலை யார்க்கும் வேண்டாம்
உலகமே !! உலகமே!!
மறுமுறை மௌனம் வேண்டாம்!!
உண்மைக்கு எதற்கு நீதி
உயிர் காக்க தேவை உதவி !!
மீண்டும் வேண்டும் எங்கள் பூமி
அதுதான் எங்கள் சாமி!!! .........