இட்லி

பூவோடு உன்னை ஒப்பிடுகிறார்கள்
பூவைப்போல் நீ மென்மையாய்
இருப்பதால்!
நிலவோடு உன்னை
ஒப்பிடவா உன்
வடிவம் வட்டமென்பதால்!
தாய்ப்பாலுக்கு நிகராய்
தரப்படும் உணவானாய்
தரத்திலும் குணத்திலும்!
அக்கறையோடு எங்களுக்காக
ஆவியில் வேகும் உன்னை
அந்நிய செலாவணிக்காக
அவதுறு பேசுபவர்கள்
ஒருமுறை உண்டால் உன்
அறுசுவையால் வெக்கி போவார்கள்!
துரித உணவுகள்
எத்தனை வந்தாலும்
எமக்கு என்ன
தூயவன் உனை மறக்காது மனம்!
தூயத்தமிழன் எங்களுக்கு
வெறுக்காது தினம்!