பள்ளிக்கூடம்
ஜாதிகள் பார்ப்பது இல்லையாம்....
ஆனால் ஜாதிக்கொரு சான்றுகள் வேண்டுமாம்....
வறுமையை போக்க கல்வி வேண்டுமாம்....
ஆனால் வறுமையில் தவிப்போருக்கு கல்வி இல்லையாம்....
ஏற்றத்தாழ்வு பார்க்காத இடம் அதுவாம்...
ஆனால் ஏர் பிடித்தவன் குழந்தைக்கு ஒரு கல்வி
கூடம்
கணினி படித்தவன் குழந்தைக்கு தனி கல்வி கூடம்...
ஒருபக்கம் பணத்தின் படிப்பு மறுபக்கம் பசியின் படிப்பு....
ஒருபக்கம் கணினி பேசுகிறது மறுபக்கம் கண்ணீர் பேசுகிறது
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!