உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, செயல்திறனை அதிகப்படுத்துவது எப்படி – வெற்றியாளர்களின் இரகசியம்

அண்மையில் TalentSmart என்னும் நிறுவனம், லட்சக்கணக்கான மக்களிடம் நடத்திய ஆய்வில், வெற்றியாளர்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர், அதாவது சுமார் 90 சதவிகிதம் பேர் உணர்வுசார் நுண்ணறிவு அதிகம் உள்ளவர்கள் என்று கண்டறிந்துள்ளது. இதில் உணர்வுசார் அறிவு என்று குறிப்பிடப்படுவது – பணியிடங்களில் உணர்சிகளுக்கு இடம் அளிக்காமல், சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது.

இதன் மூலம் பணியில் இருக்கும் போது தேவை அற்ற உணர்ச்சிகளில் தங்களது ஆற்றலையும் நேரத்தையும் வீணடிக்காமல், தங்கள் உற்பத்தித் திறனை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால் சுயக் கட்டுப்பாடு என்பது நாம் நினைப்பது போல மிகவும் சுலபான திறன் அல்ல. மார்டின் செலிக்மேன் குழு நடத்திய ஆய்வில், சுமார் இரண்டு லட்சம் பேரிடம் தங்களுடைய திறனை வரிசைப் படுத்தும்படி கூறப்பட்டது. கொடுக்கப்பட்ட 24 திறன்களில் பெரும்பாலானோர் சுயக்கட்டுப்பாட்டை கடைசியாகவே வரிசைப் படுத்தி இருந்தனர்.

_______
tamilenfo

ஆனால் சுயக்கட்டுப்பாடு உங்களை விட்டுச் செல்லும்போது உங்களுடைய செயல் திறனும் உங்களை விட்டுச் செல்கின்றது என்பதை மறக்க வேண்டாம்.

சுயக்கட்டுப்பாடு என்று வரும் பொழுது, உங்கள் தோல்விகளுக்கு வெற்றிகளை விட இரண்டு மடங்கு பாதிப்பு உண்டு. உதாரணமாக, உங்கள் உடல் எடையை குறைக்க இரண்டு நாட்கள் துரித உணவுகளை உண்ணாமல் இருந்து விட்டு, மூன்றாவது நாள் அதே கடுப்பில் நான்கு பீட்சா உண்டு விடுகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

இப்போது நடந்தது என்ன? இரண்டு அடி முன்னால் வைத்து விட்டு, நான்கு அடி பின்னால் சென்று இருக்கின்றீர்கள்.

மற்ற திறன்களை நாமாகவே வளர்த்துக் கொள்ள முடியும், ஆனால் சுயக்கட்டுப்பாடு என்று வரும்பொழுது நமக்கு உதவி நிச்சயம் தேவை. அதனால் இப்படிப் பட்ட வெற்றியாளர்கள் தங்கள் உணர்ச்சிகளை எப்படிக் கட்டுப்படுத்தி, தங்கள் செயல்திறனை அதிகப்படுத்திக் கொள்கின்றார்கள் என்பதை ஆராய்ந்து, அதில் முக்கியமான பன்னிரண்டு வழிகளை உங்களுக்காகப் பட்டியலிட்டு உள்ளோம்.

உங்களை நீங்களே மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

பலரும் தங்களுடைய சுயக் கட்டுப்பாட்டை இழப்பதற்கு முக்கியக் காரணம், இதற்கு முன்னால் நீங்கள் அடைந்த தோல்விகளின் காரணமாக உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சுய வெறுப்பே ஆகும். நீங்கள் ஒரு சந்தர்பத்தில் தோல்வி அடைந்து, சறுக்க நேர்ந்தாலும், உங்களை நீங்களே மறந்து முன்னே செல்வது மிகவும் அவசியம்; அதில் மட்டுமே உங்களுடைய ஞாபகம் முழுவதையும் செலுத்தி விடாதீர்கள். அதற்குப் பதிலாக உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்வதில்
உங்களுடைய கவனம் முழுவதையும் செலுத்துங்கள்.

தோல்விகள் உங்களுடைய சுய நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, ஒரு வேளை நாம் இனி வெற்றி பெறவே முடியாதோ என்ற சந்தேகத்தை உங்களுக்குள் எழுப்பி விடும். ஆனால் பல இடங்களிலும் நாம் தோல்வி அடைய முதல் காரணம், அந்த இடங்களில் நாம் அடைய முடியாத ஒன்றை அடைய முயன்று இருப்போம்.

எந்த இடத்திலும் வெற்றி அடைய தோல்வி அவசியம் என்று உணர்ந்து உங்களை நீங்களே மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

அவர்கள் அனைத்திற்கும் ‘சரி’ சொல்வதில்லை.

அண்மையில் சேன் பிரான்சிஸ்கோவில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் நீங்கள் எந்த அளவிற்கு மற்றவர்களிடம் ‘இல்லை’ என்று சொல்லப் பழகுகின்றீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு மன அழுத்தம் குறையும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது உங்களுடைய சுய நம்பிக்கையையும் அதிகப் படுத்துகின்றது. ஆனால் ‘முடியாது’ என்பது ஒரு கடுமையான, சக்தி வாய்ந்த சொல். அதை பயன்படுத்த வேண்டிய இடத்தில் சரியாக பயன்படுத்த வேண்டும்.

புதிய வேலைகளுக்கு நீங்கள் முடியாது என்று சொல்லும் போது, நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் வேலைகளை நீங்கள் கௌரவிக்கின்றீர்கள். உங்களால் செய்ய முடியாத எந்த வேலையையும் செய்ய நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள். இதன் மூலம் பின்னால் வரவிருக்கும் தேவையற்ற மனக் கசப்புகளை தவிர்க்க முடியும்.

அவர்கள் அனைத்திலும் முழுமையை எதிர்பார்ப்பதில்லை

எப்போதுமே இது போன்ற உணர்வுசார் நுண்ணறிவு மிக்க வெற்றியாளர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் செயல்களில் முழுமையை எதிர் பார்ப்பதில்லை. நாம் மனிதர்கள். நாம் செய்யும் எதிலும் ஏதாவது ஒரு தவறு இருக்கும். அனைத்திலும் முழுமையை எதிர்பார்த்தால் நாம் அனைத்திலும் தோல்வி அடைந்து கொண்டே இருப்பதாக நமக்குள் எண்ணம் வந்து விட வாய்ப்புகள் அதிகம்.

அவர்கள் தீர்வுகளில் கவனம் செலுத்துகின்றார்கள்

மனிதர்களில் பொதுவாக இரு வகை. எந்தத் தருணத்திலும் ஒரு பிரச்சனை என்று வரும்பொழுது, அந்தப் பிரச்சனையில் தங்கள் முழு கவனத்தையும் செலுத்துவோர் ஒரு வகை. அதற்கான தீர்வுகளில் தங்களின் கவனத்தை செலுத்துவோர் ஒரு வகை. இதில் வெற்றியாளர்கள் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள். இதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளில் மனம் குழம்பி, சோர்வுறாமல் இருக்க முடியும்.

எதிர்காலத்தை பற்றி யோசிப்பத்தில் நேரம் செலவழிக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு செயலுக்கும் அதன் எதிர்வினை குறித்து யோசிப்பது தவறில்லை. ஆனால் ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் அதன் எதிர்வினை குறித்து யோசிப்பது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது. ஒவ்வொரு செயலின் எதிர்வினையையும் நம்மால் கணிக்க முடியாது. அது நாம் நினைத்தவாறு நடக்கலாம் அல்லது அதைத் தவிர பல நூறு வழிகளில் மாறிப் போகலாம். இதைப் பற்றி அதிகம் யோசிக்காமல் முன்னேறிச் செல்ல வேண்டும்.

நன்றாகக் குறித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சமயத்திலும் திட்டமிடுதல் என்பது வேறு, கவலைப் படுதல் என்பது வேறு.

எப்போதும் நேர்மறை எண்ணத்துடன் இருப்பார்கள்.

வெற்றியாளர்கள் எப்பொழுதும் நேர்மறை எண்ணத்துடனேயே இருப்பார்கள். தோல்வி அடைவது குறித்து யோசிக்காமல், நாம் இந்தக் காரியத்தில் வெற்றி அடைந்தால் நமக்கு என்னென்ன கிடைக்கப் போகின்றது என்று மட்டுமே யோசிப்பார்கள். எந்த ஒரு நேர்மறை எண்ணமும், உங்களுடைய மனக் குழப்பத்தை நீக்கி, சரியான பாதையில் செல்ல உங்களுடைய கவனத்தைத் திசை திருப்புகின்றது. பிரச்சனைகள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கும் போது, சுயக் கட்டுப்பாடு என்பது மிகவும் கடினமான ஒன்றே. ஆனால் அதில் உங்களுக்குக் கிடைக்கப் போகும் நன்மைகளை நீங்கள் நினைத்துப் பார்க்கும் போது, எதிர்மறை எண்ணங்கள் வரத் தொடங்கி விடும்.

சரியான நேரத்திற்கு உண்ணுங்கள்; உறங்குங்கள் ; உடற்பயிற்சி செய்யுங்கள்

இவை அனைத்தும் சுயக் கட்டுப்பாட்டை அதிகரிக்கத் தேவையா என்று கேட்டால், ஆம்!! நிச்சயமாக. நீங்கள் சரியாக கவனித்து இருந்தால், ஒன்று உங்களுக்கு தெரிந்திருக்கும். சரியான தூக்கம் சரியான உணவு சரியான ஆரோக்கியம் இவை அனைத்தும் இல்லாதவர்கள் சுயக் கட்டுப்பாடு இல்லாமல் சில நேரங்களில் அதிகமாகக் கோவப் படுவதை பார்த்திருப்பீர்கள்.

மனம், உடல் இவை இரண்டும் நன்றாக இருந்தால் மட்டுமே, சுயக் கட்டுப்பாடு சாத்தியம் ஆகும்.

இப்போது உங்கள் சுயக் கட்டுப்பாட்டை வளர்க்கத் தேவையான அனைத்து வழிகளையும் நீங்கள் தெரிந்து கொண்டீர்கள். ஆனால் இவை அனைத்தையும் சரியான முறையில் பின்பற்ற வேண்டும். அப்போது வெற்றி வசப்படும்.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (10-Oct-15, 7:36 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 241

மேலே