தனிமையில் இனிமை

இரவினைத் தனதாக்கியே
வலம் வரும் நிலவு,
தனிமையினை விரும்பியே.

உலக உரிமையினை கைகொண்டிருக்கும்
இறைவனும் தனிமையிலேயே.

கருப்பு நிறத்தை கரம்கொண்டு துரத்தி நிற்கும்
கதிரவனும் தனியாகவே.

கவிஞர்கள் விரும்புவது எப்போதும்
தனிமையிலேயே உள்ள இனிமை.

தனிமை ஒன்றும் தவறில்லை
உன் போன்ற சிறந்த நடிப்பிற்கு.

தனிமையின் இனிமை எனக்கும்
புதிதல்ல புனிதமாயத்தான்.

தப்பிவிட்டோம் என்று மனதில்கொள்,
தனிமை உனக்கும் இனிமையாய்தான்.

எழுதியவர் : jujuma (2-Jun-11, 1:44 pm)
சேர்த்தது : nellaiyappan
Tanglish : thanimayil enimai
பார்வை : 616

மேலே