ஊடல் கொண்ட நம்மால்

கார்மேகம் கிழித்து
கண்கள் நுழையும்
வானவில் தான்
உந்தன் பார்வை..!!

அதிகாலைப் பொழுதுகளில்
லேசான மழைத்தூரலும்
பனித்துளிகளும் ஒன்றாக
போட்டி போட்டுக் கொள்ளும்
ஒற்றைப் புல்லின் நுனியில்
கிடந்து புரள..!!

அதைப் போலவே
எந்தன் காதலும்
எந்தன் ஊடலும்
போட்டியிடுகின்றன
உந்தன் மடியில்
கிடந்து தவழ..!!

ஊடல் கொண்ட நம்மால்
காதல் கொண்ட இரு உயிர்கள்

"என் காகிதமும்
என் எழுதுகோலும்"...!!!



செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (12-Oct-15, 6:43 pm)
Tanglish : oodal konda nammaal
பார்வை : 205

மேலே