எது நிரந்தரம்

நிலவு நிரந்தரமில்லை
சூரியன் நிரந்தரமில்லை
நட்சத்திரம் நிரந்தரமில்லை
மழை நிரந்தரமில்லை
இடி மின்னல் நிரந்தரமில்லை
ஆகாயம் மட்டும் நிரந்தரம்!

பூ நிரந்தரமில்லை
காய் நிரந்தரமில்லை
கனி நிரந்தரமில்லை
இலை நிரந்தரமில்லை
மரம் கூட நிரந்தரமில்லை
மண் மட்டும் நிரந்தரம் !

நீ நிரந்தரமில்லை
நான் நிரந்தரமில்லை
மனிதர்கள் நிரந்தரமில்லை
உயிர்கள் அனைத்தும் நிரந்தரமில்லை
அன்பு மட்டுமே நிரந்தரம் !

எழுதியவர் : (13-Oct-15, 12:13 am)
Tanglish : ethu nirantharam
பார்வை : 428

மேலே