மனோரமா

எந்த நடிப்பும் இயல்பாய் நடிப்பார்
எல்லோரும் பார்த்திருக்கிறோம்
இருவிழி மூடி உறங்குகின் றாரோ
இதுவும் நடிப்பா தவிக்கிறோம்
சிந்தை கவர்ந்து சிரிக்க வைப்பார்
ஜில்ஜில் ரமாமணி ஆச்சியாம்
சொந்தக் குரலில் பாடி நடிக்கும்
சொல் சொல் மனோரமா ஆச்சியாம்

முத்துக் குளிக்க வாரீய ளாவென
முத்தாய் பாட்டு படித்தவர்
மூச்சை யடக்கிக் கொண்ட தெதற்கு
முத்தே முத்துக் குளிக்கவா…
அண்ணா வுடனே அழகாய் நடித்த
ஆச்சி மனோரமா ஆச்சியே
ஐந்து தலைமுறை தொடர்ந்த தெல்லாம்
ஆச்சி மனோரமா ஆட்சியே
எத்தனை சிரிப்பு எப்படிச் சிரிப்பு
சின்னக் கவுண்டர் ஆச்சியே
எத்தனை மக்கள் ஏங்குகின் றார்கள்
இதற்கு வானம் சாட்சியே

எழுதியவர் : சு.ஐயப்பன் (13-Oct-15, 7:49 am)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 164

மேலே