காதல் ரகசியங்கள்

" பூக்களைப்பார்த்தால்
உன் கைகள்
பறித்துப் பார்க்க ஆசைப்படுகிறது,
ஆனால்
அதற்க்கு முன்பே
உன் கைகள்
தென்பட்டால்
பிடித்துப் பார்க்க
அந்தப் பூக்கள்தால்தான் ஆசைப்பட்டது......."""


"உன் கண் இமை
பார்த்து வியந்தநாளில் இருந்துதான்
நானும்
என் கவிதையும்
ஒரு மைக்கு விலைப்போனோம்
அந்த மைதான்
இந்தப் பேனா
" மை ""


"பல்லாயிரம் தூரம்
கடந்துச் சென்றாலும்
உன் முகம்போல்
எந்த அழகையும்
என்னால் காணமுடியாது ....."

"இதயம் என்னும்
தோட்டத்தில்
விதை என்னும்
உன் நினைவுகளுக்கு
தண்ணீர் என்னும்
என் கண்ணீரைத்தான்
என்னால் தெளிக்கமுடிந்தது""""


"காதல் என்னும்
அலைகடல் தாண்டி வந்தும்
அந்த அலையில்
சுழலில் ஏற்பட்ட வலியை
இன்னும் மறக்கமுடியாமல்
நான்.... """இரவு உறக்கத்திலாவது
வின்வெலிக்குச் செல்லவேண்டும் என்று
நினைத்து
மாறி

உன் விழிக்குச் சென்று
வந்து சொன்னேன்
இங்குதான்
ஈர்ப்பு விசை
அதிகமாக உள்ளது என்று!!!!!"

எழுதியவர் : J .MUNOFAR HUSSAIN (13-Oct-15, 1:02 pm)
சேர்த்தது : முனோபர் உசேன்
பார்வை : 166

மேலே